???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெண்டர் முறைகேடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க இறுதி கெடு

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   18 , 2019  22:54:57 IST

சென்னை, கோவை மாநகாரட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் ஏற்கனவே நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி டெண்டர் முறைகேடு குறித்து அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த பொதுத்துறை முதன்மை செயலாளர் அனுமதியளித்துள்ளதாகவும், அதன்படி ஆரம்பகட்ட விசாரணை தொடங்கியுள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் நிலை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய கடந்த ஜனவரி மாதம் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அதிகாரியான லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி சங்கர் ஆஜராகி, மேலும் 3 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உத்தரவு பிறப்பித்து ஓராண்டு காலம் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்து, மேற்கொண்டு விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி பொன்னி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விசாரணையை கண்காணித்து 2 வாரங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் இதுவரை பதிலளிக்காத அமைச்சர் வேலுமணி பதிலளிக்க 2 வாரங்கள் கடைசி கெடு விதித்து விசாரணையை நவம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...