???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப் 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   05 , 2020  02:31:45 IST


Andhimazhai Image

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி இந்நிகழ்வில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். 29 ஆண்டுகளுக்குப் பின் அயோத்திக்கு மோடி செல்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிகழ்வை யொட்டி அயோத்தி விழாக்கோலம் பூண்டிருந்தது.

டெல்லியிலிருந்து காலை விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் பத்தரை மணிக்கு  லக்னோ சென்றடைந்தார். அவரை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். அங்கிருந்து அயோத்தி சென்ற மோடி, அனுமனிகரி கோவிலுக்கு சென்று வழிபட்டு, ராமர் ஜென்மபூமியில் குழந்தை ராமரை தரையில் விழுந்து வணங்கிவிட்டு, பூமி பூஜை பந்தலில் அமர்ந்தார். முன்னதாக பாரிஜாத மலர்ச்செடியையும் நட்டார் மோடி.

வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டினார். பிறகு மூன்று முறை வலம் வந்து வணங்கினார்.

இந்நிகழ்வுக்கு 175 விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். ஆர்.எஸ்.தலைவர் மோகன்பகவத், ஆளுநர் ஆனந்திபென், உள்ளிட்டோர் இதில் அடக்கம்.

300 கோடி செலவில் 161 அடி உயரம் கொண்டதாக மூன்று அடுக்கில் இந்த ராமர் கோவில் அமைகிறது. மூன்றரை ஆண்டுகளில் கட்டுமானம் முடிவடையும்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...