![]() |
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்: பூமி இயக்குனர் ட்விட்டரில் சாபம்!Posted : புதன்கிழமை, ஜனவரி 20 , 2021 11:38:44 IST
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என பூமி பட இயக்குனர் லக்ஷ்மண் சமூக வலைத்தளத்தில் கோபமாக பதிவு செய்திருக்கிறார்.
லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் ஜனவரி 14-ம் நாள் பூமி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பாரம்பரிய விவசாயம் என்ற பெயரில் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை, ஆய்வில் நிரூபிக்கப்படாத கருத்துக்களை பேசுவதாக பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 'பூமி' படம் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுவரை நான் பார்த்த படங்களில் 'பூமி' போன்ற ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை எனக் கூறி, இயக்குநர் லக்ஷ்மணுடன் பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி எனத் தெரிவித்தார். இதில் இயக்குநர் லக்ஷ்மணை டேக் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த லக்ஷ்மண், நம் எதிர்காலத் தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என நினைத்துதான் இந்தப் படம் எடுத்ததாகவும் 'ரோமியோ ஜூலியட்' எடுத்த தனக்கு கமர்ஷியல் தெரியாதா? என காட்டமாக கூறியிருந்தார். நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் எனக் குறிப்பிட்டு நீங்க சூப்பர், ஜெயிச்சிட்டீங்க. நான் தோத்துட்டேன் என கோபமாக பதிவு செய்துள்ளார்.
|
|