???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒரே வாக்கியம் ஆயிரம் பக்கங்களில்... புக்கர் பட்டியலில் மிரட்டும் நாவல்!

Posted : சனிக்கிழமை,   ஜுலை   27 , 2019  07:23:22 IST


Andhimazhai Image
ஆங்கில இலக்கிய உலகின் மிகப்பெரிய பரிசாக கருதப்படும் 'தி புக்கர்' விருதுககான 2019-ஆம் ஆண்டு இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 13 புனைவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மார்கரெட் அட்வுட்ஸ் எழுதிய 'தி டெஸ்டமெண்ட்ஸ்', சல்மான் ருஷ்டியின் 'கியுசாட்' போன்ற நாவல்கள் இடம்பெற்றுள்ளன. 
 
இந்தப் பட்டியலில் புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஒரு நூல் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கிறது. லூசி எல்மன் எழுதியிருக்கும் 'டக்ஸ் நியுபரிபோர்ட்' எனும் அந்த புத்தகம் பரவலாக பேசப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அது ஒரே வாக்கியத்தால் ஆனது. அந்த வாக்கியம் 1000 பக்கங்களுக்கு நீள்கிறது. 
 
அட்வுட்ஸின் புத்தகமும் எதிர்பார்ப்புக்குரிய படைப்புதான் என்றாலும், எல்மனின் இந்த மாறுபட்ட புத்தகம் நடுவர்கள் மற்றும் விமர்சகர்களிடம் தனித்து நிற்கிறது என்கின்றனர்.
 
இந்நாவல் பற்றி விவரிக்கும் தி டெலகிராஃப் பத்திரிகை, "ஒஹியோவை சேர்ந்த இல்லத்தரசி கூறுவதுபோல் அமைந்த  இந்த நாவலில் இரவு உணவு விருந்தில் இடம்பெறும் உணவு வகைகள் முதல் ட்ரம்ப் ஆட்சியில் இருக்கும் அமெரிக்காவின் இருண்ட பக்கங்கள் வரை இடம்பெற்றுள்ளன. அந்த நீண்ட வாக்கியம் 426,100 வார்த்தைகள் கொண்டுள்ளது. இடையில் வரும் ஒர் உபகதை மலை சிங்கத்தின்பார்வையில் சொல்லப்பட்டு வாசகர்களுக்கு இடைவெளி அளிக்கிறது" என தெரிவித்துள்ளது.
 
நனவோடை உத்தியின் எல்லைகளைப் பரிசோதித்துப் பார்க்கும் விதத்தில் இது அமைந்துள்ளது என்கிறது கார்டியன் பத்திரிகை.
 
இதேபோல், இந்த புத்தகம் குறித்து ஆழமான வாசிப்புகொண்ட வாசர்களின் கருத்துகளும் நேர்மறையாக இருக்கின்றன. புத்தகத்திற்கு ஐந்து நட்சத்திரம் மதிப்பெண் வழங்கிய வாசகர் ஒருவர் கூறுகையில், "உங்களால் இந்த புத்தகத்துக்குள் பயணிக்க முடியும். கதையை எழுதியவர் விவரிக்கும் முறையின் மூலம் உங்களை கதைக்குள் இழுத்துக்கொள்வார். இந்த புத்தகம் உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், கோபமும்கொள்ள வைக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
 
"எழுத்தாளர் கதையை சொல்ல ஏன் இந்த வடிவத்தை தேர்ந்தெடுத்தார் என எனக்கு தோன்றியது. படித்த பிறகு தேவையின் பொருட்டு அவர் இதை செய்திருக்கிறார் என்பது புரிந்தது" என கூறியிருக்கிறார் மற்றொரு வாசகர்.
 
2019 புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நாவலில் ஒன்று மட்டுமே புதிய எழுத்தாளருடையது. பிரிட்டனில் வசிக்கும் ஒயின்கன் ப்ரைத்வைட் எழுதிய அவரது முதல் நாவலான 'மை சிஸ்டர், தி சீரியல் கில்லர்' புக்கர் பரிசுக்கு பர்ந்துரைக்கப்பட்டிருக்கிறது. புக்கர் பரிசின் சுருக்கமான இறுதிப் பட்டியல் செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 14-ஆம் தேதி வெற்றிப்பெற்ற புத்தகம் அறிவிக்கப்படுகிறது.

English Summary
Booker prize nominee book Ducks, Newburyport

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...