???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

”ஒரு பெண் கைதியின் கையை தொட்டுப்பேசியபோது... அவர் அழுதுவிட்டார்!’’

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   06 , 2020  06:08:47 IST


Andhimazhai Image
மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர்  வசந்தி தேவி எழுதிய ’பெண்ணுக்கு ஒரு நீதி நூல் வெளியீட்டு விழா எழும்பூரில் உள்ள இக்ஸா மையத்தில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற  உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் நூலை வெளியிட மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர்  ஹென்றி டிபேன் பெற்றுக்கொண்டார்.
 
 
”வசந்தி தேவி தலைவராக இருந்தபோதுதான் மகளிர் ஆணையம் சுவாசித்தது” என்று தனது உரையை தொடங்கினார் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்.  ” வெறும் கடமைக்காகத்தான் ஆணையங்களை அரசாங்கம் அமைக்கிறது. ஆணையங்கள் செயல்பட வேண்டும் என்று அரசாங்கம் நினைப்பதேயில்லை. கடும் காய்ச்சலில் இந்த புத்தகத்தை படித்து முடித்தேன். புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் கருப்பியைப்[ பற்றி படித்தபோது மன உளைச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து என்னால் படிக்க முடியவில்லை. அரசு அதிகாரம் கொடுக்கும் ஒவ்வொரு துறையும் மக்களுக்காகத்தான் செயல்பட வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அப்படி செயல்படவில்லை. அவர் சந்தித்த அனுபவங்களால் மன உறுதியை இழந்துவிடாமல் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதை நாம் பாராட்ட வேண்டும்..” என்றார். 
 
 
இவரைத்தொடர்ந்து வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்” வசந்தி தேவிக்கு முன்பு செயல்பட்ட மகளிர் ஆணையத்தின் தலைவர்களோடு இணைந்து பணியாற்ற நினைத்தேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த முயற்சியும் வெளிப்படவில்லை. வசந்தி தேவி அவர்களின் உத்வேகம்தான் என்னை அவருடன் இணைந்து செயல்பட வைத்தது. எனது கல்லூரி ஆசிரியராக இருந்த காலம் முதல் அவரை எனக்கு தெரியும். அவரைபோன்றவர்களிடம் பேசிவிடமாட்டோமா என்று ஏங்கியதும் உண்டு. பெண் சிறைச்சாலைக்கு அவருடன் சென்றபோது, அதிகாரிகளிடம் அவர் பேச்சுக்கொடுப்பார். நான் கைதிகளை சந்திப்பேன். ஒரு பெண் கைதியின் கையை தொட்டு பேசியபோது. அவர் அழுதுவிட்டார். என்னை யாரும் இப்படி அன்பாக தொட்டதில்லை என்றார். இப்படி களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையை எங்களுக்கு கற்றுக்கொடுத்தவர் அவர் . இதன் மூலம் குண்டர் சட்டத்தில் பெண்களை கைது செய்யும் சதவிகிதம் குறைந்தது,” என்றார்.
 
 
ஹென்றி டிபேன் ”இந்த புத்தகம் மாநில மற்றும் தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உண்மை முகத்தை சத்தமில்லாமல் அம்பலப்படுத்தியிருக்கிறது.  உலகில் எந்த நாடுகளில் இந்தியாவைபோன்று மனித உரிமை ஆணையங்கள் இல்லை. இந்தியாவில் மொத்தம் ஒன்பது மனித உரிமை ஆணையங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் நிலைதான் அவலமாக இருக்கிறது. சிவில் சமூக அமைப்புகளுடன் வசந்திதேவி ஆற்றிய பொதுப்பணியின் காரணமாகத்தான் மகளிர் ஆணையத்தில் அவர் சிறப்பாக செயல்ப முடிந்தது.
 
 
களத்தில் பணியாற்றும் இவர்களைப்போன்றவர்களை ஆணையத்தின் தலைவராக நியமிக்காமல் அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கிறது. ஆணையத்தை உருவாக்கும் அரசு அதில் வேலை செய்பவர்களுக்கு சரியாக ஊதியம்  வழங்குவதில்லை. மாதம் ஆயிரம் ரூபாய்க்கு யாராவது வேலை செய்ய இயலுமா?. போதாகுறைக்கு பகுதி நேர ஊழியர்களை வேலைக்கு எடுப்பது. ஆனால் கேரளாவில் ஆணையத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஒரு லட்சத்திற்கு அதிகமாக சம்பளம் தருகிறார்கள்” என்றார். 
 
 
நன்றியுரை வழங்கிய வசந்தி தேவி ”எல்லா மாநிலங்களிலும் உள்ள மகளிர் ஆணையங்கள் சட்ட அதிகாரத்துடன் நிறுவப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் ஆணையத்திற்கு மட்டும் சட்ட அதிகாரம் இல்லை. இந்நிலையில்தான் நான் தலைவராக பொறுப்பேற்றேன். நான் பணியாற்றிய மூன்று ஆண்டுகளிலும்கூட சட்ட அதிகாரத்தை அரசு கொடுக்கவில்லை. அப்போது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த  பூர்னிமா அத்வானியின் முழு ஒத்துழைப்பால்தான் எங்களால் செயல்பட முடிந்தது. சட்ட அதிகாரம் கொடுக்காவிட்டாலும் இயங்க முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நான் பதவியேற்பதற்கு முன்பாக 110 மனுக்கள் ஆணையத்திடம் விசாரணைக்கு வந்தது. நான் பொறுப்பேற்ற பிறகு 295 ஆக உயர்ந்தது. இறுதியாக 885 மனுக்கள் வந்தது. மகளிர் ஆணையம் என்று ஒன்று இருக்கிறது. அது நீதி பெற்று தரும் என்று மக்கள் நம்பினார்கள். அதனால்தான் அதிக மனுக்கள் வந்தன. சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டதால்தான் பல முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடிந்தது” என்றார்.
 
 
நிகழ்வை சமூக செயல்பாட்டாளர் ப்ரேமா ரேவதி தொகுத்து வழங்கினார்.
 
 
-வாசுகி
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...