???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நெகிழ்வாக அமைந்த கவிதை நூல் வெளியீடு!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   16 , 2019  05:57:47 IST


Andhimazhai Image

என்னைப் பற்றி

நீவிர் அறிந்ததையும்

நானே அறிந்ததையும் ஒப்பிடுவதே வாழ்க்கை

விடுகதை நான்

விடைகளோ வெவ்வேறு வண்ணம்...

 

-பாரதி யாழ்

 

மாலை முரசு தொலைக்காட்சியின் நிருபர் ஷாலினி சென்ற ஆண்டு வாகன விபத்தின் போது மரணமடைந்தார். அவர் எழுதிய கவிதைகளை சேகரித்து ‘ ’பாரதி யாழ்’ என்ற கவிதை புத்தகத்தை ம. லோகேஷ் என்ற பதிப்பாளர் பதிப்பித்துள்ளார்.

 

ஷாலினியின் நினைவஞ்சலி கூட்டத்துடன், பாரதி யாழ் புத்தக வெளியீடு விழா சென்ற வாரம் சனிக்கிழமை நடைபெற்றது.  இந்த நிகழ்வுக்கு பல பத்திரிக்கையாளர்களும் வந்திருந்தனர்.

 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர்கள்  திருமாவளவன், கனிமொழி, இயக்குநர் லெனின் பாரதி,  பாடலாசிரியர் மோகன் ராஜன், அருட்பணி குடந்தை ஞானி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

வரவேற்புரை வழங்கிய  தனியார் தொலைக்காட்சியின் தலைமை நிருபர் ஆசிப் முகமது பேசும்போது ‘ பத்திரிக்கையாளர்களின் வேலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.  அவர்கள் மிக எளிதில் வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர். பத்திரிக்கை துறை டிஜிட்டலாக மாறி பல ஆண்டுகள் சென்றுவிட்டது, ஆனால் தொலைக்காட்சி, மற்றும் இணையதளத்தில் பத்திரிக்கையாளர்களாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு தனிச்சட்டம் இல்லை.  எங்கள் பிரச்சனைகளை பற்றி பாராளுமன்றத்தில் திருமாவளவனும், கனிமொழியும் பேச வேண்டும். மேலும் இதற்கு விரைவில் தீர்வுகாண வேண்டும் என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து பேசிய  லெனின் பாரதி ’விபத்து என்பதை நான் கொலையாக பார்க்கிறேன். இப்போது நடைபெறும் அதிக விபத்துகள் முறையாக சாலையை பராமரிக்காமல் இருப்பதால் நடக்கிறது. மேலும் மூடாமல் விடும் பள்ளம், குழி இவற்றால் அதிக சாலைவிபத்துகள் நடக்கிறது. .ஆனால் விபத்திற்கு காரணமாக லாரி ஒட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் கைது செய்யப்படுகிறார்கள். 90 சதவிகிதமான சாலை விபத்துக்கு ஆளும் கட்சியின் அலட்சியப்போக்கே காரணம். சாலை விபத்து செய்தியை எழுதும்போது, சாலையை இப்படி மோசமாக அமைத்த அதிகாரிகளை பற்றியும் ஒப்பந்ததாரர்களை பற்றியும் பத்திரிக்கையில்  எழுதுங்கள். வெறும் ஓட்டுநர்களை மீண்டும் குற்றவாளியாக்காதீர்கள்’’ என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ’’ஷாலினிக்கு கலைஞருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசை என்று அவரது அம்மா என்னிடம் கூறினார். நானும் எப்போதும்போல ‘ இதிலென்ன எடுத்துக்கொள்ளலாம்’ என்று சொல்ல முனைந்தேன். அதன்பின்தான் தெரிந்தது இருவரும் இல்லை என்று. ஷாலினியின் சமூக அக்கறையை பாராட்டுகிறேன். நூல் வெளியிடவேண்டும் என்ற அவரின் கனவும் நனவானதில் மகிழ்ச்சி ’’என்றார். முன்னதாக திருமாவளவன் ஷாலியின் கவிதைகளைத் தொகுத்த நூலை வெளியிட கனிமொழி பெற்றுக்கொண்டார். ஷாலினிக்கு ஷர்மிளா என்ற இரட்டைச் சகோதரி உண்டு. அவர் மேடைக்கு வந்து நூலைப் பெறும்போது கண்ணீர் மல்கினார். கனிமொழி அவரை அணைத்து முத்தமிட்டு ஆறுதல் படுத்திய காட்சி நெகிழ்வாக இருந்தது.

 

இதைத்தொடர்ந்து பேசிய திருமாவளவன், ஷாலினியின் பெற்றோரை ஆறுதல் படுத்துவதுதான் முக்கியம் . அவரின் நண்பர்களின் முயற்சியை வாழ்த்துகிறேன். சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஷாலினியின் கவிதைகள், அவர் நட்பின் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் , சமூக அக்கறையயும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று கூறினார்

 

”8 மணிநேர வேலை எங்களுக்கில்லை,  எப்போதும் பரபரப்பு, நாங்கள் வேலை செய்யும் சேனலைவிட மற்ற சேனல் செய்தியை முன்பாக தெரிவித்துவிட்டால் எங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை, தீபாவளியும் , ஞாயிறும்  எங்களுக்கில்லை. இதைத்தாண்டி ஊடகத்தின் மீது வீசும் எல்லா விமர்சனக் கற்களும்  எங்களைத் தாண்டியே எங்கள் அலுவலகம் சென்றடையும்” என்று  நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கூறியதும் அரங்கமே அதிரும் வகையில் கைத்தட்டல்கள் ஒலித்தன. பாரதியாழ் என்று தனக்குப் புனை பெயர் வைத்துக்கொண்ட ஷாலினி என்ற அந்த இளம் ஊடகப் பெண்ணின் நினைவலைகள் மிதந்த அந்த அரங்கில் இந்த கைதட்டல் ஒலி மிக கனமாக இருந்தது.

 

-வாசுகி

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...