???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிலதிபரை மணந்தார் நடிகை பிரியாமணி 0 நேர்மையான ஆளுநருக்கு இது இலக்கணமல்ல: ராமதாஸ் 0 எம்எல்ஏக்களை சந்திக்க தினகரன் புதுச்சேரி பயணம் 0 தமிழகத்தில் நீட் ஒரு கல்வி புரட்சி : தமிழிசை பெருமிதம் 0 அமைச்சர்கள் அனைவரும் சென்னை வர முதலமைச்சர் திடீர் உத்தரவு 0 ரயில்வே வாரியத் தலைவராக அஷ்வனி லோகனி நியமனம். 0 நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நாளை கலந்தாய்வு. 0 ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியான சம்பவம்: 6 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு. 0 சொத்துக்குவிப்பு வழக்கு : சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி. 0 நீட் துரோகத்தை தமிழகம் மன்னிக்காது: ஸ்டாலின் 0 சபாநாயகரை முதலமைச்சராக்க வேண்டும்: திவாகரன் யோசனை 0 தமிழகம் இனி கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: நளினி சிதம்பரம் 0 நீட் விலக்கு: 4-ஆம் தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் 0 பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிடுங்கள்: ஸ்டாலின் கடிதம் 0 ஓபிஎஸ்ஸுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது குண்டுவீச்சு!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   17 , 2017  06:57:11 IST

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர்  ஜி. ராமகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில் கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தின் மீது இன்று (17.6.2017) காலை பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
 
இதில் கட்சிக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனம் மற்றும் அலுவலகத்தின் ஜன்னல் பகுதி சேதமடைந்துள்ளதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தின் மீதான இத்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
 
கோவை மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமையையும், அமைதியையும் குலைக்க விரும்பும் சக்திகள் சமீப காலமாக அதிகரித்து வருவது கவலை தருவதாகவும், சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் தாக்கப்பட்டதும், கொடிக்கம்பங்கள் வெட்டப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றிருக்கிறது.
 
மேலும் காலை நேரத்தில் கட்சி அலுவலகத்தின் மீது நடைபெற்றுள்ள இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து, சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும், கோவையில் சமீப காலமாக தலைதூக்கியுள்ள இத்தகைய வன்முறை நடவடிக்கைக்கு முடிவுகட்ட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு, தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
 
பின்னர் தமிழகத்தின் ஜனநாயக இயக்கங்கள் இத்தகைய வன்முறை தாக்குதலுக்கு எதிராக உறுதியாக கண்டனக் குரலெழுப்ப வேண்டுமெனவும் கேட்டுக் கொள்வதகவும் கூறினார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...