???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போகன் சங்கருக்கு கவிஞர் ஆத்மாநாம் விருது!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   06 , 2018  00:49:30 IST


Andhimazhai Image
2018 ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது கவிஞர் போகன் சங்கருக்கு வழங்கப்படுகிறது. கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் தொடர்ச்சியாகப் படைப்புலகில் இயங்கிவரும் போகன் சங்கர் 1972-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயற்பெயர் கோமதி சங்கர். சுகாதாரத் துறையில் பணி செய்து வருகிறார். நாகர்கோயிலில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.
 
 
போகன் சங்கரின் முதல் கவிதைத் தொகுப்பு எரிவதும் அணைவதும் ஒன்றே 2012-ஆம் ஆண்டு வெளியானது. அந்தத் தொகுப்பு கவிஞர் ராஜ மார்த்தாண்டன் விருதையும் சுஜாதா அறக்கட்டளை விருதையும் பெற்றது. அதன்பிறகு தடித்த கண்ணாடி போட்ட பூனை, நெடுஞ்சாலையை மேயும் புள், சிறிய எண்கள் உறங்கும் அறை என்று மூன்று கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. போக புத்தகம், கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் என்று இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.
 
 
கவிஞர் ஆத்மாநாம் விருது [2018] - அறிக்கை:
 
 
கவிஞர் ஆத்மாநாம் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும் மெய்ப்பொருள் பதிப்பகம் ‘கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’யைக் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது. 2015-ஆம் ஆண்டு கவிஞர் இசை அவர்களுக்கும் 2016ஆம் ஆண்டு ‘மீகாமம்’ தொகுப்புக்காகக் கவிஞர் க.மோகனரங்கன் அவர்களுக்கும் 2017ஆம் ஆண்டு ‘பெருங்கடல் போடுகின்றேன்’ தொகுப்புக்காகக் கவிஞர் அனார் அவர்களுக்கும் ‘கவிஞர் ஆத்மாநாம் விருது’ வழங்கப்பட்டது.
 
 
இரண்டடுக்குத் தேர்வு முறையில் விதிகளுக்கு உட்பட்டு கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் யுவன் சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவின் முடிவின்படி இந்த ஆண்டுக்கான ரூ.25000/- பரிசுத் தொகை அடங்கிய கவிஞர் ஆத்மாநாம் விருது ‘சிறிய எண்கள் உறங்கும் அறை’ தொகுப்புக்காக கவிஞர் போகன் சங்கர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
 
 
பரிந்துரையாளர்கள், தேர்வுக்குழுவினர் ஆகியோருக்கு எங்கள் அன்பான நன்றி. கவிஞர்  போகன் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள். கவிஞர் ஆத்மாநாம் விருது வழங்கும் விழா  சென்னையில் 2018, அக்டோபர்  மாதம் 20-ஆம் தேதி மிகச்சரியாக மாலை 5 மணிக்குக் கவிக்கோ மன்றத்தில் நடைபெறும்.
 
 
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை,
சென்னை.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...