???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விபத்து எதிரொலி: போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு இந்தியாவில் தடை

Posted : புதன்கிழமை,   மார்ச்   13 , 2019  23:24:03 IST

எத்தியோப்பியா விமான விபத்தில் 157 நபர்கள் இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவிலும் புதன்கிழமை முதல் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திடம் 8 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமும், ஜெட் ஏர்வேஸிடம் 5 விமானங்களும் உள்ளன.
 
போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் பறக்கத் தடை மற்றும் விமானச் சேவை ரத்துக் குறித்துச் சம்மந்தப்பட்ட விமானச் சேவை நிறுவனங்களிடமும் முன்னேற்பாடு நடவடிக்கை பற்றியும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் விவாதித்து வருகிறது.
 
சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகள் செவ்வாய்க்கிழமை முதலே போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் பறக்க தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவிலும் தடை விதித்துள்ளனர்.
 
2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியோனேஷியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லயன் ஏர்லைன்ஸின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானது.
 
அடுத்த 5 மாதத்தில் எத்தியோப்பியா விமான விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விமானத்தை இயக்க விமானிகள் சிரமப்படுவதாகவும் கூறுகின்றனர்.
 
இந்திய அரசு முதலில் போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை மூத்த விமானிகளைத் தவிர வேறு யாரும் இயக்கக்கூடாது என்று திங்கட்கிழமை அறிவுறுத்தப்பட்டது.
 
போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தில் உள்ள தொழில்நுட்ப சிக்கலை கண்டறிந்து அதை நீக்கும் வரை இந்தத் தடை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...