???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீல நிறத்தில் ஜொலிஜொலித்த கடல்: மீன்களுக்கு ஆபத்தா?

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   19 , 2019  09:55:35 IST


Andhimazhai Image
சென்னை திருவான்மியூர், பெசண்ட் நகர் உள்ளிட்ட கடற்பகுதியில் நேற்றிரவு கடல் நீர் நீல நிறமாக மின்னியது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது சமூக வலைத்தளங்களில் பரவியவுடன் ஏராளமான மக்கள் கடற்கரைக்கு சென்று அதனை ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். மக்கள் வெளியிட்ட அந்த புகைப்படங்கள் அனைவரையும் பிரம்மிக்கவைத்ததோடு சில கேள்விகளையும் எழுப்பியது. கடல் நீர் எவ்வாறு நீல நிறத்தில் ஒளிர்ந்தது என பலரும் விவாதித்தனர்.
 
இதேபோன்ற நிகழ்வு உலகின் பல்வேறு கடற்பகுதியில் நடந்திருக்கிறது. எனினும், தமிழகத்தில் கடல்நீர் நீலவண்ணத்தில் ஒளிர்வதென்பது மிகவும் புதிது.
 
Noctiluca scintillans என்னும் கடலில் மிதக்கும் நுண்ணுயிரிகள் இவ்வாறு நீல நிறத்தில் ஒளிரக்கூடியவை. இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது நீல நிறத்தில் கடல் பளபளக்கும். இவற்றை ’கடல்மினுமினுப்பு’ என்று கூட அழைப்பார்கள். அரபிக்கடலில் ஆக்சிஜன் அளவு குறைவதால் இவ்வுயிரியின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதாக என்று நேச்சர் இதழில் வெளியான பத்தாண்டுகளுக்கு முன்பான நிகழ்வு பற்றிய ஆய்வு கூறுகிறது.
 
இந்த விசித்திர நிகழ்வு குறித்து கடலோர வள மையத்தின் ஆய்வாளர், செயற்பாட்டாளர் பூஜா ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
 
"Noctiluca நுண்ணுயிரிகள் மிதந்ததால்தான் சென்னை பகுதிகளின் கடற்கரையில் கடர்நீர் நீல நிறமாக ஒளிர்ந்தது. இந்த நிகழ்விற்கும், கடல் வெப்பமயமாதலுக்கும் தொடர்பு இருக்கிறது. கடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை இது காட்டுகிறது.
 
இதனால் அதிகளவு அம்மோனியா வெளிப்படுவதால் மீன்களின் உயிரிழப்பு ஏற்படும். இவை அனைத்துமே கடல்சார் சூழலியல், உணவுச்சங்கிலிக்கு ஆபத்தான போக்குகள்,” என்று எச்சரித்துள்ளார் இவர்.
 

English Summary
Blue glow on Chennai beach

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...