???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்!- மருத்துவர் இராமதாசு 0 கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் 800க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் 0 கிரீமிலேயர் முறையை முற்றாகக் கைவிடுக!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 0 தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா? -முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி 0 எட்டு போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம்: உ.பி, ரவுடி விகாஸ் துபே கைது! 0 சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் 0 ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்கள் நீக்கம்! 0 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் 0 தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மே   19 , 2019  08:52:36 IST

17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் தேதி மார்ச் மாதம் 10-ல் அறிவிக்கப்பட்டது.  இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 7-வது இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைப்பெற்றது. தேர்தல் முடிந்த பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. மத்தியில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும் என கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ்- விஎம்ஆர் கருத்துக்கணிப்பில் பா.ஜனதா கூட்டணி 306 தொகுதிகள் வரையில் வெற்றிப்பெறும் எனவும் காங்கிரஸ் கூட்டணி 142 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் பிற கட்சிகள் 94 தொகுதிகளில் வெற்றிப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி மற்றும் சி ஓட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜனதா கூட்டணி 287 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 128 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 127 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கூட்டணிக்கே அதிகமான இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது.

தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆதிக்கம் செலுத்தும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இங்கு அதிமுக கூட்டணிக்கு 4 தொகுதிகளும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 34 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு 29 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 9 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...