???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   20 , 2019  21:39:52 IST

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு எதிரான போராட்டத்தில் முழுவதுமாக வெற்றி பெறமுடியவில்லை என்று பா.ஜ.க கேரள மாநிலத் தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
 
கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அம்மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக கேரளா மாநில பா.ஜ.க தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவருகிறது. அதில், ஒரு பகுதியாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை பா.ஜ.க நடத்தியது.
 
இந்நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, “காலவரையற்ற உண்ணாவிரதம் கைவிடப்படுகிறது. பல கட்ட போராட்டங்களில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு நிறைய விஷயங்களை சாதித்துள்ளோம். இருப்பினும், 100 சதவிகிதம் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை. ஐயப்பனின் அருளால், எங்களால் அதிக அளவுக்கு மக்களின் ஆதரவைப் பெற முடிந்தது”என்று தெரிவித்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...