???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவும் பாஜக

Posted : புதன்கிழமை,   மே   29 , 2019  06:04:31 IST


Andhimazhai Image2019 மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் மேற்கு வங்கத்தில் சிபிஎம் ஒரு முக்கிய பணியை தொடங்கி தீவிரமாக செய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 160 அலுவலகங்களை சிபிஎம் கைப்பற்றியுள்ளதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நடவடிக்கைக்கு பாஜக ஆதரவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் முன்னெப்போதும் காணாத வரலாற்றுத் தோல்வியை நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் சிபிஎம் கட்சி சந்தித்திருக்கிறது. தாம் வெற்றிபெற வேண்டுமென்பதைவிட, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை தழுவ வேண்டுமென்பதில் சிபிஎம் தீவிரமாக இருந்ததாகவும், இதன் காரணமாக பெரும்பாலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜக வாக்களித்தனர் என்பதும் பரவலான குற்றச்சாட்டாக இருக்கிறது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் வெறும் இரண்டு இடங்களில் வென்ற பாஜக இம்முறை அம்மாநிலத்தில் 18 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. கடந்தமுறை 2 தொகுதிகளிலாவது வெற்றிபெற்ற சிபிஎம் இம்முறை ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. அதுவும் போட்டியிட்ட 41 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே சிபிஎம் கட்டுத்தொகையை பெற்றிருக்கிறது.

இப்படியான தோல்வியை சந்தித்திருக்கும் சிபிஎம், 22 தொகுதிகளில் வெற்றிபெற்று முன்னிலையில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது அலுவலகங்களை மீட்டு வருகிறது. இதற்கு உறுதுணையாக இருப்பது பாஜக.

34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் பலமாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி, 2011-யில் ஆட்சியைக் கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஆயிரக்கணக்கான சிபிஎம் அலுவலகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. எனவேதான் இப்போது சிபிஎம் அலுவலகங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பில் கருத்துக் கூறிய சிபிஎம் நிர்வாகி ஒருவர், "தேர்தலுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் பலவீனமான நிலையில் இருக்கிறது. இத்தகைய சூழலில் கட்சி அலுவலகங்களை மீட்டு வருகிறோம். இதற்கு பாஜக நேரடியாக உதவுகிறது என கூற முடியாது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்" என கூறியிருக்கிறார்.

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜகவுக்கு வாக்களித்திருப்பதாக எழுந்த சர்ச்சை தொடர்பில் கருத்துக் கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, "பாஜகவும், திரிணாமுல் கட்சியும் இணைந்து இவ்வாறான பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக கூறியிருந்தார்.

ஆனால், இப்போது கட்சி அலுவலகங்கள் மீட்பு நடவடிக்கையில் பாஜகவோடு கைகோர்த்திருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலரே ஒப்புக்கொள்வதாக செய்திகளில் கூறப்பட்டிருக்கிறது. அதேசமயம், கட்சி அலுவலங்கள் மீட்பது தொடர்பில் கட்சி சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ள சிபிஎம் மூத்த தலைவர் சுஜன் சக்ரபொர்த்தி, பல்வேறு இடங்களில் கட்சியினர் இந்த பணியை செய்துவருவதாக செய்திகள் வருகின்றன என கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் கால செயல்பாடு மற்றும் தற்போதைய நடவடிக்கை பற்றி கருத்துக் கூறும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், "சிபிஎம் கட்சியின் கைகள், பாஜகவின் கையுறைகளை அணிந்துகொண்டு பணியாற்றுவதாக தேர்தலின்போதே நாங்கள் கூறியிருந்தோம். இப்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் அதனை உறுதிப்படுத்துகின்றன" என குற்றம்சாட்டியுள்ளனர்.


English Summary
bjp supports cpm in west bengal

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...