???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சமூக வலைதளங்களில் விநாயகனை குதறிய கேரள பாஜக ஆதரவாளர்கள்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   03 , 2019  03:59:23 IST

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கேரளத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மலையாள நடிகர் விநாயகன், ஆர்.எஸ்.எஸ் – பாஜகவுக்கு எதிராக கருத்து கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜக ஆதரவாளர்கள் பலர், நடிகர் விநாயகன் மீது நிறவெறுப்பு, சாதிய வாத தாக்குதல்களை சமூக ஊடகங்களின் வழியாக நடத்தி வருகின்றனர்.

 

மலையாளத்தில் கம்மட்டிப்பாடம், ஈ மா யு போன்ற பல்வேறு படங்களில் நடித்த விநாயகன் தமிழில் திமிரு, மரியான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் துருவநட்சத்திரம் படத்திலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த விநாயகன், "நாம் புத்திசாலியான மக்கள். அவர்கள் (ஆர்.எஸ்.எஸ் – பாஜக) இங்கும் எதுவும் செய்யமுடியாது. சங் பரிவார – பாஜக கொள்கைகளை கேரள மக்கள் புறக்கணித்ததில் பெரும் மகிழ்ச்சி" என கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் களமிறங்கிய பாஜக ஆதரவாளர்கள், நடிகர் விநாயகனை சாதியரீதியாகவும், அவரது நிறத்தை முன்வைத்தும் விமர்சனம் செய்துவருகின்றனர். "நீ ஒரு கம்மி(கம்யூனிஸ்ட்) என தெரியாமல் போய்விட்டது. கேரள மக்கள் பாஜகவை புறக்கணிக்கிறார்களா இல்லையா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டாம். இனி உங்கள் படத்தை பார்க்க மாட்டோம்" என பலவிதமாக பதிவிட்டு வருகிறார்கள்.


English Summary
Bjp supporters target vinayakan on social websites

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...