செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
இந்தியர்கள் ஆஸ்கர் விருது வென்றதற்கு பா.ஜ.க உரிமை கொண்டாடக்கூடாது: மல்லிகார்ஜூன கார்கே
மாநிலங்களவையில் அலுவல்கள் தொடங்கியதும் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ஆஸ்கர் விருதுகள் வென்றதற்காக ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிஃபண்ட்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
இந்தியர்கள் ஆஸ்கர் விருது வென்றதற்கு பா.ஜ.க உரிமை கொண்டாடக்கூடாது: மல்லிகார்ஜூன கார்கே
Posted : வியாழக்கிழமை, மார்ச் 16 , 2023 10:20:00 IST
மாநிலங்களவையில் அலுவல்கள் தொடங்கியதும் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ஆஸ்கர் விருதுகள் வென்றதற்காக ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
பின்னர் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் இரண்டு பெண்கள் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது பெற்றுக் கொடுத்திருப்பது பெருமைக்குரியது எனத் தெரிவித்தார். மேலும் ஆஸ்கர் விருது வென்ற ’நாட்டு நாட்டு’ பாடல் ஆசிரியர், பாஜகவால் நியமனம் செய்யப்பட்ட எம்பி எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, விருது பெற்ற இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டார். ஆனால் இதற்கு பாஜக உரிமை கொண்டாடக் கூடாது என்றும் குறும்படத்தை மோடி இயக்கினார் என்றும் கூறக் கூடாது என தெரிவித்தார். கார்கேவின் பேச்சு அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
1984ஆம் ஆண்டிலேயே இந்தியா ஆஸ்கர் விருதினை பெற்றுவிட்டதாக காங்கிரஸ் எம்.பி ஜெயராம் ரமேஷ் பேசினார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாட வேண்டிய தருணத்தில் ஆளுங்கட்சி அரசியல் செய்வதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய வைகோ, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்றதை நினைவுக்கூர்ந்தார்.
|