???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகர் விஜய் தந்தைக்கு காவி வேட்டி அனுப்பிய பாஜக தொண்டர்!

Posted : திங்கட்கிழமை,   மே   27 , 2019  23:58:11 IST

கடந்த 20-ம் தேதி வடபழனியில், 'காப்பாத்துங்க நாளை சினிமாவை' என்ற குறும்பட வெளியீட்டு விழா நடந்தது. இதில், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட விஜய்யின் அப்பாவும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், அரசியலில் 90 சதவிகிதம் பேர் திருடர்களாக உள்ளனர். அரசியல்வாதிகள் சினிமாவை அழிக்க திட்டம் போட்டுள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் சினிமாவை யாரும் காப்பாற்றவில்லை. அரசியல் வாதிகள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுக்கு கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. மக்களை திரட்டி இதுகுறித்து போராடினால் தான் அரசுக்கு சொரணை வரும்.

தேர்தல் முடிவுக்கு முன் வெளியான கருத்துக்கணிப்பை வைத்து, தமிழகத்தைப் பொறுத்தவரை தப்பித்துக் கொள்வோம், ஆனால், வெளியில் பொறுத்தரை கண்டிப்பாக தவறு செய்திருப்போம். மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டு அலையப் போவதாகவும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், பாஜகவை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இதற்கு இயக்குநர் எஸ்.ஏ.சிக்கு தன் மகன் விஜயை முதல்வராக்க ஆசை. அதனால் இவ்வாறு பரபரப்பாக பேசி மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார் என்று பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டு முகவரிக்கு, பாஜகவினர் ஒரு பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில், காவி வேட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், கடிதம் ஒன்றும் பார்சலாக வந்துள்ளது. அதில், பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி என்றும், முதல் தவணையாக காவி வேட்டி அனுப்பியுள்ளோம். இனி ஒவ்வொரு தவணையாக காவி வேட்டி அனுப்பிக் கொண்டே இருப்போம். ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் காவி வேட்டியே அணிய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...