???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுகவை வழிநடத்து பாஜகதான்!: நல்லகண்ணு 0 நரசிம்மராவ் போல் மவுனம்: முதல்வரை விமர்சித்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ 0 இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 0 இன்று 42-வது ஆண்டு: இந்திராகாந்தி கொண்டு வந்த ‘நெருக்கடி நிலை’ 0 தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை: 5-வது இடத்தில் தமிழகம் 0 கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றி : ரஹானே சதமடித்தார் 0 ஆஸ்திரேலியா பாட்மிண்டன் : பட்டம் வென்றார் கிடம்பி ஸ்ரீகாந்த் 0 ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை: சீமான் 0 50,000 விவசாயிகளுடன் ஜூலை 11-ல் முற்றுகை போராட்டம்: ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு முடிவு 0 ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி உயராது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 0 ராஜஸ்தானில் மசூதிக்கு மூவர்ணத்தில் மின்விளக்குகள் அமைத்து அசத்தல் 0 லாக்கரில் வாடிக்கையாளர் வைக்கும் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது: ரிசர்வ் வங்கி 0 சசிகலா குடும்ப நாடகத்துக்கு முதல்வரும் துணை: கே.பி. முனுசாமி 0 ரமலான் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து 0 ரஜினி படித்தவர்: சு.சுவாமி கருத்து பொன்.ராதா பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்!

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   19 , 2017  05:12:32 IST

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா டெல்லியில் செய்தியாளர்களிடையே இதை அறிவித்தார். ராம்நாத் கோவிந்த் தற்போது பீகார் ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். பாஜகவைச் சேர்ந்த அவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து இரண்டு முறை (1994 மற்றும் 2000) மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வழக்கறிஞரான இவர் மத்திய அரசின் வழக்கறிஞராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் 1977 முதல் 1979 வரை பணியாற்றியவர். 1998ல் இருந்து 2002 வரையில் பாஜகவின் தலித் மோர்ச்சா அமைப்புக்குத் தலைவராகப் பணியாற்றினார்.
 
டெல்லியில் இன்று பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் ராம்நாத் கோவிந்த்தை பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்த அமித் ஷா, இது குறித்து சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார் எனத் தெரிவித்தார். 23 ஆம் தேதியன்று ராம்நாத் கோவிந்த் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என்றும் அவர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...