அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   17 , 2021  08:22:05 IST

பாஜக பிரமுகரான கல்யாணராமன் சமூக வலைதளமான ட்விட்டரில் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களை சர்ச்சைக்குரிய வகையில் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
மேலும் திரைப்பட நடிகை மருத்துவர் ஷர்மிளாவை ஆபாசமான முறையில் பேசியுள்ளார், அந்த வகையில் திமுகவின் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரின் உதவியாளர் சந்தோஷ் முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர், மருத்தவர் ஷர்மிளாவை ஆபாசமாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். எனவே அவரை உடனே கைது செய்யவேண்டும் என சென்னை சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
 
அந்த புகாரின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்ட 10 மணிநேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.உசென்னை வளசரவாக்கம் தேவி குப்பம் அன்பு நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற பாஜக பொதுகூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...