???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மோடிக்கு எதிராக பாஜக மூத்த தலைவர்கள் போர்க்கொடி

Posted : புதன்கிழமை,   நவம்பர்   11 , 2015  02:38:12 IST


Andhimazhai Image

பீகார் சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, பாரதிய ஜனதாவில் பிரதமர் மோடியின் தலைமைக்கு எதிராக அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, உள்ளிட்ட நான்கு தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

டெல்லியில் பாரதிய ஜனதா மூத்தத் தலைவர் முரளி மனோஹர் ஜோஷி, அத்வானியை சந்தித்து பிகார் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கே.என். கோவிந்தாசாரியா ஆகியோரும் முரளி மனோஹர் ஜோஷியை சந்தித்து பேசினர்.

இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா மூத்தத் தலைவர்கள் அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் சாந்தகுமார் ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், பாரதிய ஜனதா கடந்த ஒரு ஆண்டில் பலவீனப்பட்டு போய்விட்டதாகவும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரின் விருப்பங்களுக்கு பணியவேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் சந்தித்த தோல்வியிலிருந்து பாடம் கற்க தவறிவிட்டதாகவும் அந்த கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். தேர்தல் தோல்விக்கு அனைவரும் பொறுப்பு என்று கூறுவது, யார் மீதும் தோல்விக்கான பொறுப்பு விழுந்துவிடக்கூடாது என்பதற்காக சொல்லப்படும் சாக்கு என்றும் மூத்தத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அதற்கு உரிமை கொண்டாட தயாராக இருந்த சிலர் தற்போது தோல்விக்கான பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்கள் என்பதையே இது காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீகார் சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்படவேண்டும் என்றும் அந்த தேர்தல் பணிக்கு தலைமையேற்றவர்களே இந்த ஆய்வை மேற்கொள்ளக் கூடாது என்றும் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...