???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழப்பு 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மு.க.ஸ்டாலினைப் பாராட்டிய பா.ஜ.க தலைவருக்கு கண்டனம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   01 , 2019  22:31:08 IST

புதுக்கோட்டையில் தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் இல்லத் திருமண விழாவில் பா.ஜ.க துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘எம்.ஜி.ஆருக்கு பிறகு, தான் ரசித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ’முதல்வர் பதவியைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை.

ஆட்சி அதிகாரம் ஜனநாயக முறைப்படி கிடைக்க வேண்டுமென காத்திருக்கிறார். காலம் கனியும் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராவார். தமிழகத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் விரைவில் அரியணையில் ஏறுவார். நாம் அதையெல்லாம் பார்க்க போகிறோம்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இதுதொடர்பாக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஃபேஸ்புக் பதிவில், ‘தி.மு.க திருமண விழாவில் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் அரசகுமார் தி.மு.க காரனாகவே மாறி பேசியது கண்டிக்கத்தக்கது. இந்துத்வா மீது தினசரி சகதிவாரி வீசும் மு.க.ஸ்டாலினுக்கு இவர் சந்தன அபிஷேகம் செய்தது அவரின் பழைய தி.மு.க விசுவாசமா?

அவரின் பேச்சை எந்த ஒரு பா.ஜ.க தொண்டனும் ஏற்க மாட்டான். மாநிலத் தலைமை அவரிடம் விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...