???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மே   19 , 2019  22:43:07 IST

வட மாநிலங்களில் மோடி அலை தொடர்ந்து வீசினாலும், தென்னிந்தியாவில் பாஜகவில் கால்பதிக்க முடியவில்லை என்று தேர்தலுக்கு கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.


கர்நாடகா:

இந்தியா டுடே - மை ஆக்ஸிஸ் இந்தியா கருத்துக்கணிப்பின் படி கர்நாடகத்தில் ஆளும் கூட்டணியான காங்கிரஸ் - மதச்சார்பற்ற தங்கள் பலத்தை நிரூபிக்க தவறிவிட்டது. எனவே அங்கு பாஜக 21 முதல் 25 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது. காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு 3 முதல் 6 இடங்கள் வரை வெற்றி வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
 

தமிழ்நாடு:

தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே - மை ஆக்ஸிஸ் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 34 முதல் 38 தொகுதிகள் வரை வெற்றி அடைய வாய்ப்புள்ளது என்று தெரிய வந்துள்ளது. பாஜக - அதிமுக கூட்டணி 4 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சாணக்யா நடத்திய கருத்துக்கணிப்பிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி 31 இடங்களிலும், அதிமுக கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா:

கேரளாவை பொறுத்தமட்டில் சபரிமலை விவகாரத்தில் பாஜக தோல்வியடைந்தததால் அங்கு காங்கிரஸின் கை ஓங்கியுள்ளது. சாணக்யா நடத்திய கருத்துக்கணிப்பின் படி காங்கிரஸ் 16 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
 

ஆந்திரா:

ஆந்திராவில் இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 18 முதல் 20 இடங்களில் வெற்றிஅடையும் என்றும், தெலுங்கு தேசம் 2 முதல் 3 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. எனினும் சாணக்யா நடத்திய கருத்துக்கணிப்பில் இதற்கு நேர்மாறாக முடிவு வெளியாகி உள்ளது. அங்கு தெலுங்கு தேசம் 17 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

தெலங்கானா:

தெலங்கானாவை பொறுத்த வரை சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் கோட்டையாகவே திகழ்கிறது. அக்கட்சி 10 - 12 இடங்களில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் , பாஜக ஆகிய 2 தேசிய கட்சிகளுமே அங்கு 0 - 3 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...