???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்து கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கைத் தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குமாரசாமி பதவி விலக வலியுறுத்தி கர்நாடகாவில் பாஜக தர்ணா போராட்டம்

Posted : புதன்கிழமை,   ஜுலை   10 , 2019  00:15:59 IST

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமியின் அரசு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தன்னை சந்திக்காமல் ராஜினாமா கடிதம் அளித்திருப்பதை ஏற்க முடியாது என்றும், ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை என்றும் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார்.

ராஜினாமா கடிதம் வழங்கிய 13 நபர்களில் 8 பேரின் மனுக்கள் சட்டவிதி 202-ன் படி இல்லாததால், நிராகரித்துவிட்டதாகக் கூறிய சபாநாயகர் ரமேஷ் குமார், ஆனந்த் சிங், நாராயண கவுடா உட்பட 5 எம்.எல்.ஏக்களை நேரில் விளக்கமளிக்க அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலம் நபி ஆசாத், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஒவ்வொன்றாக ஆட்சிக் கவிழ்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு ஆளுநர்களை பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆட்சி நடத்த தேவையான பெரும்பான்மையை இழந்துவிட்ட குமாரசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை 11 மணியளவில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடைபெறும் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...