![]() |
உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம்Posted : புதன்கிழமை, ஜுன் 29 , 2022 22:37:16 IST
![]() மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ள நிலையில், பா.ஜ.க. தரப்பில் அதை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மும்பை தாஜ் ப்ரெசிடெண்ட் நட்சத்திர விடுதியில் இன்று மாலையில் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்ட கூட்டம் தொடங்கியது.
மாலை நேர விருந்துடன்கூடிய அந்தக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆதரவாக, அங்கிருந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இந்தக் காட்சி சமூக ஊடகங்களிலும் பரவியது.
இதனிடையே, ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து உச்சநீதிமன்ற உத்தரவும் வெளியானது. அதைத் தொடர்ந்து மாநில மக்களுக்கு உரையாற்றிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அப்பதவியிலிருந்து தான் விலகப்போவதாக அறிவித்தார்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆரவாரம் செய்தனர்.
அங்கிருந்த தேவேந்திர பட்னாவிஸ் உள்பட அனைவரும் இதை இனிப்பு எடுத்தும் பகிர்ந்தும் கொண்டாடினர்.
English Summary
BJP celebrated Uddhav resignation in a Mumbai hotel
|
|