அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பாஜகவால் என்னை நெருங்க முடியாது - ராகுல் காந்தி சவால்!

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   27 , 2021  16:14:08 IST

அரசியல் வாழ்வில் தான் நேர்மையுடன் இருப்பதால், பாஜகவால் தன்னை நெருங்க முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.



இந்நிலையில், தமிழகத்தில் 2-வது கட்டமாக இன்று  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ராகுல் காந்தி, தூத்துக்குடியில், வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.



அப்போது பேசிய ராகுல் காந்தி, "தங்களை விமர்சிப்பவர்களை, கேள்வி கேட்பவர்களை அச்சுறுத்தும் கைது செய்யும் பாஜக என்னை மட்டும் நெருங்குவதில்லை. நான் அதிர்ஷ்டக்காரன். ஏனென்றால், எனது அரசியல் வாழ்க்கையில் நான் மிகுந்த நேர்மையுடன் இருக்கிறேன். என் மீது எவ்வித ஊழல் புகாரும் இல்லை. அதனால், என் மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு என எதையும் ஏவிவிட முடியாது. அதன் காரணமாகவே பாஜக என்னை 24 மணி நேரமும் விமர்சிக்கிறது" என்றார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...