![]() |
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி!Posted : திங்கட்கிழமை, மார்ச் 15 , 2021 10:48:42 IST
பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தாராபுரத்திலும், நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பட்டியலை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங், டெல்லியில் வெளியிட்டார். அதன் விவரம் திருவண்ணாமலை- தணிகைவேல் நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி குளச்சல் - ரமேஷ் ராமநாதபுரம் - குப்புராம் மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி துறைமுகம் - வினோஜ் பி செல்வம் ஆயிரம் விளக்கு - குஷ்பு திருக்கோவிலூர் - கலிவரதன் திட்டக்குடி (தனி)- பெரியசாமி கோவை தெற்கு- வானதி சீனிவாசன் விருதுநகர் - பாண்டுரங்கன் அரவக்குறிச்சி - அண்ணாமலை, திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன் திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன் காரைக்குடி - ஹெச்.ராஜா தாராபுரம் (தனி) - எல்.முருகன் மதுரை வடக்கு - சரவணன்
|
|