அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   24 , 2022  07:18:37 IST

அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னையில் பேட்டியளித்தார். அப்போது அவர், 'அ.தி.மு.க. பொதுக்குழுவின் ஒட்டுமொத்த முடிவும், வேண்டுகோளும் என்னவென்றால் ஒற்றை தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவேண்டும் என்பதுதான். அந்த வேண்டுகோளின்படிதான் பொதுக்குழு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். எங்களை பொறுத்தவரை சமாதான பேச்சுவார்த்தை பேசப்பட்டது. ஆனால் அவர்களாக வெளியேறி சென்றால் என்ன செய்ய?. எல்லோரையும் அரவணைத்து செல்வதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு' என அவர் கூறினார். 
 
அதனைத் தொடர்ந்து 'அ.தி.மு.க. பிரச்சினையில் பா.ஜ.க. தலையிட்டு சமரசம் செய்கிறதா?', என நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ''பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்கள் ஒரு கட்சி. அக்கட்சி என்றுமே அ.தி.மு.க.வின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது. எப்போதும் 3-ம் கட்சி எங்கள் கட்சியில் தலையிடுவதை நாங்கள் விரும்பமாட்டோம். அவர்களும் அதை விரும்ப மாட்டார்கள்'', என்று டி.ஜெயக்குமார் பதில் அளித்தார். மேலும், 'அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டிருக்கிறதே?', என்ற கேள்விக்கு, ''அதை நான் பார்க்கவும் இல்லை, கேட்கவும் இல்லை'', என்று பதில் அளித்தார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...