அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பிட்காயின் மதிப்பு 50,000 அமெரிக்க டாலர்கள்!

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   18 , 2021  11:18:27 IST



கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் பணத்தில் முதன்மை இடத்தில் இருக்கும் பிட்காயினின் மதிப்பு 50,000 டாலர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதால் அதில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இணைய உலகில் மின்னணு பணபரிவர்த்தனையின்போது பயன்படுத்தப்படும் கிரிப்டோகரன்சி பிட்காயின். 2009-இல் உருவாக்கப்பட்ட இதன் மதிப்பு கடந்த சில வருடங்களாக பன்மடங்கு உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த ஆண்டில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 293% உயர்ந்து, இதில் முதலீடு செய்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இதன் உச்சமாக கடந்த 16-ஆம் தேதி ஒரு பிட்காயினின் மதிப்பானது 50,000 டாலராக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து இந்த கிரிப்டோகரன்சி மீது உலக முதலீட்டாளர்கள் கவனம் குவிந்திருக்கிறது.

அமெரிக்க மின்னணு கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா பிட்காயினில் முதலீடு செய்ததையடுத்து இந்த பூதாகர மதிப்பை பிட்காயின் பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் பல்வேறு பாரம்பரிய பண பரிவர்த்தனை நிறுவனங்களும் இப்போது இதில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளன.

கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை அமெரிக்க டாலர் மதிப்பில் பிட்காயினின் மதிப்பு சில நூறுகளாக மட்டுமே இருந்தது. பின்னர் பல்வேறு நிறுவனங்கள் மின்னணு பரிவர்த்தனையில் பிட்காயினுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கின. அதன் தொடர்ச்சியாகவே இதன் மதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இப்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 50,000 டாலர்கள் விகிதத்திற்கு உயர்ந்திருந்தாலும், கண்ணுக்கு தெரியாத நிதியாக இருக்கும் பிட்காயினில் சற்று கவனமாக முதலீடு செய்வது நல்லது என்கிற வாதத்தையும் பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...