???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திரைவிமர்சனம் : பிஸ்கோத்

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   17 , 2020  23:37:40 IST


Andhimazhai Image
அப்பா ஆரம்பித்த பிஸ்கட் கம்பெனியிலேயே சாதரண சூப்பர்வைஸராக வேலைபார்க்கும் கதாநாயகன், அப்பாவின் ஆசைப்படி கம்பெனியின் முதலாளியானாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. 
 
ஆங்கிலத்தில் ’ஆடம் சாண்ட்லர்’ நடிப்பில் வெளியான ’பெட் டைம் ஸ்டோரிஸ்’ என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் சந்தானத்தின் ‘பிஸ்கோத்’. 
 
தமிழ் படங்களுக்கே உரித்தான ஹீரோயிஸம், செண்டிமெண்ட் இத்யாதிகளுடன் பழைய மாவினை மாடர்னான பேக்கரியில் சுட்டு பிஸ்கோத்தை கொடுத்துள்ளார்கள். 
 
‘பெட் டைம் ஸ்டோரிஸ்’ படத்தில் வருவது போலவே ஹிட்டான சில படங்களின் ஸ்பூஃப் காட்சிகள், படத்தில் அடுத்து நடக்கப் போகிற விஷயங்களை காமெடியாகச் சொல்கின்றன. 
 
’பிஸ்கோத்’சந்தானத்தின் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும். படத்தில் சந்தானம் படு ஃபிட். ஒரு நல்ல கமர்ஷியல் கதாநாயகனுக்கான உடல்மொழியை திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார். அதே சமயம், பாட்டியின் கதைகளில் வரும் பாகுபலி, ஸ்பார்ட்டன் வேடங்களில் வழக்கம் போல காமெடிக்காக கவுன்டர்களை அள்ளி வீசுகிறார். அது ஓவர் டோஸாகிறது. 
 
மொட்டை ராஜேந்திரன், மனோகர் படம் முழுக்க சந்தானத்தின் கூடவே இருந்து சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். முதல் பாதியில் கதாநாயகிக்கு காட்சிகள் இல்லை. சில நிமிடங்களே வந்து செல்கிறார். அதனாலோ என்னவோ படத்தின் இரண்டாம் பாதியில்  தேவையில்லாத இடத்தில் அவருக்கு ஒரு பாட்டை சொருகியிருக்கிறார்கள். கதாநாயகிக்கு பதிலாக துணைக் கதாநாயகி தான் படம் முழுக்க ட்ராவல் ஆகிறார். 
 
முன்னாள் வில்லன், இன்று காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வரும் ஆனந்தராஜை எதிலுமே சரியாக பயன்படுத்தவில்லை. சவுக்கார் ஜானகி அம்மாவிற்கு இது 400-வது படம். கதை சொல்லும் பாட்டியாக கலக்கியிருக்கிறார். 
 
முதல் பாதி எப்போது முடிந்தது என்று சொல்லும் அளவிற்கு வேகமாக செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதி  மெதுவாக நகர்கிறது. படத்தில் வரும் ஸ்பூஃப் காட்சிகள் அளவிற்கு நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. 
 
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் இந்த ’பிஸ்கோத்’ சுவையாக இருக்கும். 
 
- கார்த்திக்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...