அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பீமா கொரோகான் கலவர வழக்கு: பிரதமருக்கு கடிதம் எழுதிய சர்வதேச அறிஞர்கள்!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   12 , 2021  19:07:35 IST


Andhimazhai Image

பீமா கொரேகான் கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் 16 பேரையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி கல்வியாளர்கள், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என மொத்தம் 57 பேர் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தலைமை நீதிபதி, மகாராஷ்டிர முதல்வர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


பீமா கோரேகான் வழக்கில் சுதீர் தவாலே, எழுத்தாளர் மற்றும் தலித் உரிமை செயல்பாட்டாளர் மகேஷ் ரவுத், செயற்பாட்டாளர் ஷோமா சென், நாக்பூர் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியத் துறையின் தலைவர் அருண் பெரெய்ரா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், எழுத்தாளர் வரவர ராவ்,  செயல்பாட்டாளர் வெர்னான் கன்சால்வஸ், சிறைக் கைதிகளுக்கான செயல்பாட்டாளர் ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், வழக்கறிஞர் ஸ்டான் ஸ்வாமி, பேராசிரியர் ஹனி பாபு, செயல்பாட்டாளர் கௌதம் நவ்லகா, ஆய்வாளர் ஆனந்த் டெல்டும்ப்டே மற்றும் கபீர் கலா மஞ்ச் குழுவை சேர்ந்த சாகர் கோர்கே, ரமேஷ் கெய்சோர் மற்றும் ஜோதி ஜக்தாப் ஆகியோர் என மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.


இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என கல்வியாளரும், மொழியியல் அறிஞருமான நோம் சோம்ஸ்கி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் முன்னாள் தலைவர் ஜோஸ் அன்டோனியோ குவேரா, நோபல் பரிசு பெற்ற ஓல்கா டோகார்ஸுக் மற்றும் வோல் சோயின்கா, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பார்த்தா சட்டார்ஜி, பிரவுன் பல்கலைக்கழக பேராசிரியர் அசுதோஷ் வர்ஷ்னி, மனித உரிமை செயற்பாட்டாளர் ஷாஹிதுல் ஆலம், தி கார்டியன் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் ஆலன் ரஸ்பிரிட்ஜர், ஊடகவியலாளர் நவோமி க்ளீன் ஆகியோர் என மொத்தம் 57 பேர் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.


அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, "இந்திய சிறைகளில் உள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


உலக அளவில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியா மூன்றில் ஒரு பங்கை கொண்டிருக்கிறது. தற்போது இந்திய சிறைகளில் விசாரணைக்காக காத்திருக்கும் மனித உரிமை செயல்பாட்டாளர் மிகக் கடுமையான சுகாதாரப் பிரச்சனைகளை எதிர் கொள்வதற்குக் கவலைப்படுகிறோம். சிறையில் நெரிசல், கவனிப்பற்றத் தன்மை, சரியான மருத்துவ வசதிகள் இல்லாமல் உள்ளது.
 

தண்ணீர் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே சிலருக்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சமீபத்தில் அரசியல் கைதிகள் இருவர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் முயற்சியால் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நாடு மிகமோசமான சூழலை எதிர் கொண்டுள்ள நிலையில், மேலும் மிக மோசமான நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக, பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரையும் விடுவிக்க அரசாங்கமும், நீதிமன்றமும் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.” எனக் கோரிக்கை வைத்துள்ளவர்கள், கொரோனா தொற்றால் சிறையில் உள்ளவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இவர்களின் உயிர்களை இந்திய அரசமைப்பு நிச்சயம் பாதுகாக்கும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.


மேலும், ”நெரிசல் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் சிறையில் இருக்கும் பீமா கொரோகான் கைதிகள் 16 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களது உறவினர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும். பேரழிவை தவிர்ப்பதற்காக இரக்கத்தையும் பொறுப்பையும் காட்டுங்கள். கண்ணியமாக வாழ்வதற்கும் இறப்பதற்கும் அவர்களின் அரசியலமைப்பு உரிமையை உறுதி செய்யுங்கள்.” என கேட்டுக்கொண்டுள்ளவர்கள், இந்த கடிதத்தின் மீது இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

தா.பிரகாஷ்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...