???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஹைட்ரஜனால் இயங்கும் உலகின் முதல் சொகுசுப்படகு: பில்கேட்ஸ் வாங்கினாரா?

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   15 , 2020  00:31:30 IST


Andhimazhai Image

ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கக்கூடிய உலகின் முதல் சொகுசு உல்லாசப் படகு ‘அக்வா’- இதை 645 மில்லியன் டாலர்களுக்கு மைக்ரோசாஃப்ட் உரிமையாளர் பில் கேட்ஸ் வாங்கிவிட்டார் என்பது பரபரப்பான தகவல். பில் கேட்ஸுக்கு என்னப்பா.. எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்கிறீர்களா? ஆனால் இதை நாங்கள் விற்கவில்லை என இதன் வடிவமைப்பாளர் சாண்டர் சினோட் மறுத்துள்ளார். இன்னும் இந்த படகு தயாராகி கடலில் இறங்கவில்லை. ஆனாலும் அதற்குள் இதைப் பற்றி பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. காரணம் இதில் இருக்கும் நவின உல்லாச வசதிகள்.

 

எண்ணற்ற சொகுசு வசதிகளுடன் கூடிய இந்த அதிநவீன படகு மொனாக்கோ படகு கண்காட்சியில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அங்குலம் அங்குலமாக சொகுசு வசதிகளால் இழைக்கப்பட்டிருக்கும் இந்த படகு ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கக்கூடியதாகும். இதனால் இந்த கடல் சூழலியலுக்கு எவ்வித பாதிப்புமில்லாத நீரை மற்றுமே வெளியேற்றும். இந்த அம்சமே அக்வாவுடன் பில் கேட்ஸை இணைத்தது. இயல்பாகவே சுற்றுச்சூழல் மீதும், பருவநிலை மாற்றம் மீதும் அக்கறை செலுத்தும் நபர் பில் கேட்ஸ்.

 

அக்வாவில் அப்படி என்னதான் இருக்கிறது?

 

அக்வாவில் என்ன இருக்கிறது என்பதை சொல்வதைவிட எது இல்லையென சொல்லிவிடுவது எளிது. இதில் இருக்கும் வசதிகளின் பட்டியல் அந்த அளவுக்கு நீள்கிறது. 370 அடி நீளம் கொண்ட அக்வா சொகுசு படகில் ஐந்து தளங்கள் உள்ளன. மொத்தமாக 31 பேர் கொண்ட குழு பணியாற்றும் இதில் உடற்பயிற்சி மையம், யோகா ஸ்டுடியோ, அழகு நிலையம், மசாஜ் பார்லர் என பல வசதிகள் உள்ளன. இவை எல்லாவற்றையும்விட மற்ற சொகுசுக் கப்பல்களில் இருந்து அக்வாவை வேறுபடுத்தி காட்டுவது ஹைட்ரஜனில் இயங்கும் திறன் தான்.

 

28 டன் அளவுள்ள இரண்டு தொட்டிகள் குளிரூட்டப்பட்டு, திரவ ஹைட்ரஜனால் நிரப்பப்படுகின்றன. இவை அக்வா இயங்குவதற்கான எரிசக்தியை வழங்குகின்றன.

 

அக்வா சூப்பர் படகு கடலின் தன்மைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அலைகளின் இயக்கம், காலநிலை போன்றவற்றை உள்வாங்கி செயல்படும் திறன் இதற்கு உள்ளது.

 

படகின் பின்புறம் பொழுதுபோக்கின் உச்சங்களை அடையும் வாய்ப்பளிக்கும் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று நீச்சல் குளம், சூரிய குளியல் தளம் அடங்கிய பகுதி. மற்றொன்றில் வெளிப்புற உணவருந்தும் இடம், குளிமையான மாலை நேரங்களில் குளிர் காய்வதற்கு உதவும் இடம் இருக்கிறது.

 

கடலை நோக்கி இறங்கும்படி அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளம் ரம்மியத்திற்கான எடுத்துக்காட்டு. கீழ்புறம் 14 பேர் அமரக்கூடிய டைனிங் ஹால் திரையரங்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

ஹைட்ரஜனால் இயங்கும் அக்வா அந்த சக்தியை மின்சாரமாக மாற்றி, தண்ணீரை மட்டும் கடலில் கலக்கிறது. ஒருமுறை ஹைட்ரஜன் நிரப்பினால் அதனை கொண்டு 3,750 மைல்கள் பயணிக்கும். அட்லாண்டிக் கடலை கடக்க இது போதுமானது என கணக்கிட்டிருக்கிறார்கள்.

 

ஆனால், அக்வா 2024-க்கு பிறகு தான் கடலில் இயக்கப்படும் என்கிறார் இதன் வடிவமைப்பாளர் சாண்டர் சினோட். மேலும், இதன் உரிமத்தை பில் கேட்ஸ் வாங்கிவிட்டதாக கூறப்படுவதையும் மறுக்கிறார்.  சரி வுடுங்க.. பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்… இல்ல… பக்கோடா தயாரிக்கிறான்…

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...