???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு 0 எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை! 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்"
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முட்டாள்தனமான கேள்வியும் மூக்கு முட்ட சாப்பாடும்!

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   16 , 2020  01:23:14 IST


Andhimazhai Image

சாப்பிட வருகிறவர்கள் முட்டாள்தனமான கேள்வி கேட்டால் ஓர் உணவகத்தில் 38 செண்ட் பில் போட்டு வசூலிக்கிறார்கள்.  இங்கு அல்ல. அமெரிக்காவில். இந்த முட்டாள்தனமான கேள்வி என்ற ஐட்டத்துடன் உள்ள உணவகத்தின் ரசீது புகைப்படம் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

கொலராடோவில் உள்ள ’டாம்ஸ் டின்னர்’ என்ற உணவகம் உள்ளூர் வாசிகளிடம் மிக பிரபலம்.  இந்த உணவகத்தில் சாப்பிட்ட ஒருவர்  “ முட்டாள்தனமான கேள்வி” என்ற வார்த்தை இடம் பெற்றிருந்த பில்லை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். 

 

மேலும் அதற்கு 38 சென்ட் அதாவது இந்திய மதிப்பில் 27 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. சேச்சே.. இப்படி எல்லாம் இருக்காது.அந்த பில் போலியாக இருக்கும் என சிலர் நினைத்தனர்.ஆனால் அது உண்மைதானாம். 

 

அந்த கடை  மேலாளர் “ நகைச்சுவை உணர்வுக்காக இதுபோன்ற விஷயங்களை செய்கிறோம். இன்றைய காலத்தில் சற்று விளையாட்டுத்தனமாக இருப்பது நல்லதுதான்” என்றார். 1999-ல் இருந்து இந்த கேள்வி மெனுகார்டில் இடம் பெற்றுள்ளதாம். ஜாலியான கஸ்டமர்களிடம் இப்படி வசூலிப்பார்களாம். சிலர் வேண்டுமென்றே மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு முட்டாள்தனமான கேள்வியை சர்வரிடம் கேட்டு பில்லில் பணம் கட்டுவதும் உண்டாம்.

 

இதுபோல ” உணவை சாப்பிடாமல்விட்டால் பணத்தை மிச்சப்படுத்தலாம்” , “ வீட்டுக்கு பணமில்லாமல்நடந்து செல்லுங்கள்” போன்ற வாசகங்கலும் இந்த உணவகத்தின்  உணவுப் பட்டியல் அட்டையில் இடம்பெற்றுள்ளது.

 

மூளை இருக்கா? அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம், வட போச்சே போன்ற விஷயங்களையும் நம் ஊர் ஓட்டல்காரர்கள் இடம் பெறச் செய்யலாமே?click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...