???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு!

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   17 , 2019  23:14:42 IST

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு வேகமாக நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் பலியாகி இருந்தனர். நோய் பாதிப்பால் 117 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதில், முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

அங்குள்ள கிருஷ்ணா மருத்துவமனையிலும், கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் பலி எண்ணிக்கை இன்று 100-ஐ தொட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...