???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ் சீசன் 3: முகென் வெற்றியாளர்..200 கோடி வாக்குகள்..!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   06 , 2019  12:58:37 IST


Andhimazhai Image

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டிலை முகென் வென்றுள்ளார். இரண்டாம் இடத்தை சாண்டியும் 3ம் இடத்தை லாஸ்லியாவும் பிடித்துள்ளனர்.

 

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் ’கிராண்டு பினாலேவுக்கு’  மதுமிதாவை தவிர எல்லா போட்டியாளர்களும் வந்திருந்தனர். கஸ்தூரி ‘ஒரு குச்சி ஒரு குல்பி’ பாடலுக்கு நடனமாடி அசத்தினார். அவரைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2-வின் போட்டியாளரான யாஷிகாவும் நடனமாடினார்.

 

எப்போதும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் யாராவது ஒருவரை உள்ளே அனுப்பித்தான் 3வது மற்றும் 4வது இடத்தில் இருக்கும் போட்டியாளர்களை வெளியே கூட்டி வருவார்கள்.

 

ஆனால் இந்த முறை சீசன் 2-வின் வெற்றியாளரான ரித்விக்கா பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார். அவர் உள்ளே சென்று ஷெரினை வெளியே அழைத்து வந்தார். அப்போது பேசிய ஷெரின் ‘நான் இறுதிப்போட்டிக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதனால் இதை நான் தோல்வியாக நினைக்கவில்லை. எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கிறது’ என்றார்.

 

பின்னர் பேசிய கமல்,  ஷெரின் தனது மனிதத்தை விட்டுக்கொடுக்கவே இல்லை என்றும் வீட்டில் யாருடன் சண்டை வந்தாலும் அவருடன் பகைமை காட்டாமல் உடனே சமரசம் செய்துகொள்வார் என்றும் பாராட்டினார். மேலும் பேசியவர் ’ஷெரினை வெற்றியாளர் ஆவார் என்று பலர் கருதினர். அவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்திருந்தாலும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.

 

தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு ஷெரின் நன்றி தெரிவித்தார். மேலும் ஷெரினுக்கு முன்னால் மூன்று பியூரட்டை வைத்து வீட்டில் இருக்கும் மூவரின் வெற்றி விகிதாசாரத்தை கணிக்க வேண்டும்  என்று கமல் கூறினார். இதைத்தொடர்ந்து பச்சை திரவத்தை அந்த பியூரட்டில் ஊற்றினார். முதல் இடத்தை சாண்டிக்கும் இரண்டாம் இடத்தை முகனுக்கும் முன்றாம் இடத்தை லாஸ்லியாவுக்கும் கொடுத்தார் ஷெரின்.

 

இதைத்தொடர்ந்து கமலின் மகள் ஸ்ருதி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தார். அவர் வீட்டினுள் சென்று லாஸ்லியாவை வெளியில் அழைத்து வந்தார். வீட்டினுள் சென்ற ஸ்ருதி சாண்டியின் தாளங்களுக்கு ‘வானம் எல்லை என்பது இன்றில்லை’ பாடலை பாடினார்.

 

’சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலுக்கு வனிதா கலக்கலாக நடனமாடினார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் இறுதியாக முகெனிடமும் சாண்டியிடமும் பேசினார். அப்போது ‘சிஷியா (சாண்டி) உங்களை நான் மட்டுமல்ல எல்லா மக்களும் மிஸ் செய்வார்கள் என்று கூறினார். பின்னர் முகெனிடம் பேசிய பிக்பாஸ், முகென் அய்யா பாசம் எப்போதும் அனாதை ஆகாது. நீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் மீது அன்பு செலுத்த லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர்.

 

இந்த வீட்டில் நீங்கள் சிரித்த, அழுத, கோபம் கொண்ட எல்லா நினைவுகளும் இங்கே ஒலித்துக்கொண்டே இருக்கும். எனக்கு உருவம் இல்லை என்றாலும் உணர்வால் உங்களுக்கு தோழனாக ஆசானாக இருந்து வழிகாட்டியிருக்கிறேன். இனி எனது குரலை உங்களால் கேட்க முடியாது. உங்கள் எதிர்கால  கனவுகளுக்கும் லட்சியத்திற்கும் எனது  வாழ்த்துகள். இது உங்கள் பிக்பாஸ்’ என்றார்.

 

அவர் பேசியதை கேட்ட போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் அழுகை வந்திருக்கும். இறுதியாக முகெனும் சாண்டியும் வீட்டில் எல்லா இடத்திற்கும் சென்று அவர்கள் உருவாக்கிய பாடல்களை பாடினர்.

 

இதைத்தொடர்ந்து விஜய் டிவியின் மேலாளாரை கமல் பேச அழைத்தார். அவர் பேசியதாவது:

 

‘பிக்பாஸ் சீசன்களில் இதுதான் சிறந்த சீசன். இந்த சீசன் முழுவதும் சேர்த்து 200 கோடி ஓட்டுகள் கிடைத்திருக்கிறது. இறுதி போட்டிக்கு மொத்தம் 20 கோடி பேர் வாக்களித்துள்ளனர்’ என்றார்.  

 

தொடந்து முகெனை வெற்றியாளராக கமல் அறிவித்தார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...