???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: சாக்‌ஷி என்னை கீழே தள்ளினார் : கவின் புதுப் புகார்!

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   08 , 2019  03:59:23 IST


Andhimazhai Image

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய  எபிசோடில் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் வழங்கப்பட்டது. டாஸ்க் கடுமையாக இருந்ததால் அழுகை, சண்டை என்று எதுவும் நடக்கவில்லை.

 

மூன்று சுற்றுகளாக இந்த டாஸ்க் நடைபெற்றது. போட்டியாளர்கள் ஜோடிகளாக பிரிக்கப்பட்டனர். டாஸ்க் மணி ஒலித்ததும் போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட கில்லர் காயினை மற்றவர்கள் மீது ஒட்டவேண்டும். அவர்கள் இவர்களிடமிருந்து தப்பித்து ஓட வேண்டும். இறுதியாக மணி அடிக்கும்போது யாரிடம் அந்த கில்லர் காயின் இருக்கிறதோ அவர்கள் ஏற்கெனவே சேமித்த புள்ளியிலிருந்து 50 சதவிகிதம் குறைக்கப்படும். 

 

அபிராமி- மதுமிதா, லாஸ்லியா-சாக்‌ஷி, சேரன் - கவின், தர்ஷன் - சாண்டி, முகென் - ஷெரின் என்று ஜோடிகள் பிரிக்கப்பட்டனர். முதல் சுற்றில் அந்த காயின் அபிராமியிடம் இருந்தது. இரண்டாவது சுற்றில் அது லாஸ்லியாவிடம் இருந்தது. இதைத்தொடர்ந்து மூன்றாவது சுற்றில் அந்த கில்லர் காயின் சேரன் இடம் இருந்தது. போட்டியின் இறுதியில் மதுமிதா மூன்றாவது இடத்திலும் தர்ஷன் இரண்டாவது இடத்திலும் சாண்டி முதல் இடத்திலும் இருந்தனர்.

 

இதைத்தொடர்ந்து பெரிய கண்ணாடி பாத்திரத்தில் கலர் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். அந்த தண்ணீருக்குள் சில காயின்ஸ் இருக்கும். இதை ஒவ்வொரு போட்டியாளர்களும் எடுக்க வேண்டும். அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதை போட்டியாளர்கள் செய்ய வேண்டும்.

 

முதலில் தர்ஷன் இதை செய்த போது, 250 மதிப்பெண்களை ஒரு போட்டியாளரிடமிருந்து இருந்து அவர்  எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சாண்டியை தேர்வு செய்து அவரிடமிருந்து  250 புள்ளிகளை எடுத்துகொண்டார். இதுபோல ஒவ்வொரு போட்டியாளர்களும் தேர்வு செய்யச் செய்ய, போட்டியாளர்களின் புள்ளிகள் மாறிக்கொண்டே இருந்தன.

 

இறுதியில் மதுமிதா மூன்றாவது இடத்திலும், அபிராமி இரண்டாவது இடத்திலும்  சாக்‌ஷி முதல் இடத்திலும் இருந்தனர். இந்த போட்டியில் சாக்‌ஷி வென்றதால், அடுத்த வாரம் அவரை போட்டியிலிருந்து யாரும் வெளியேற்ற முடியாது என்று பிக்பாஸ் அறிவித்தார். ஆனால் இது நிகழ இந்த வாரம் அவர்  வெளியேற்றப்படாமல் இருக்க வேண்டும். போட்டியின் போது கவின் மீது  கில்லர் காயினை சாக்‌ஷி ஒட்ட வந்தபோது அவர் தடுக்கி விழுந்தார். இதனால் கவினுக்கு அடிப்பட்டது. ஆனால் கவின் ’என்னை சாக்‌ஷி தள்ளி விட்டாரா ? அல்லது நானா விழுந்தேனா என்று எனக்கு தெரியவில்லை ’’ என்று  சாண்டியிடம் கூறினார். 

 

மேலும் போட்டியில் கஷ்டப்பட்டு விளையாடிய தர்ஷனும், சாண்டியும் வெற்றி பெறவில்லை. ஆனால் அதிர்ஷடத்தில் அபிராமியும் சாக்‌ஷியும் வென்றது தனக்கு பிடிக்கவில்லை என்றும்  சொன்னார் கவின். சாக்‌ஷியே கவினைப்பற்றி பேசவில்லை என்றாலும், கவின் அவரைப்பற்றிய தவறான எண்ணத்தை மற்றவர்களிடம் உருவாக்க நினைக்கிறார்.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...