???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: கவினிடம் கோபித்த சாக்‌ஷி!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   18 , 2019  03:09:53 IST


Andhimazhai Image

பிக்பாஸின் நேற்றைய எபிசோட் ‘ ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’ என்ற பழைய பாடலுடன் தொடங்கியது.

 

நேற்றைய எபிசோட் முழுக்க சாக்‌ஷி, கவின், லாஸ்லியாவின் உறவுச்சிக்கல் பற்றிய வாக்குவாதம் மற்றும் அதை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்துகள் அதிகம் காணப்பட்டன.

 

சாண்டி, முகென், தர்ஷன், ஆகியோருடன் கவின் தனது பிரச்சனையை பகிர்ந்துகொள்கிறார். இதற்கு பதிலளிக்கும் தர்ஷன், ’சாக்‌ஷியைத்தான் முதலில் நீங்கள் நெருக்கமாக நினைத்தீர்கள். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக லாஸ்லியாவிடம் பேசுகிறீர்கள். இதனால் இருவரும் கோபமாக இருக்கிறார்கள். இதை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இரண்டு பெண்களும் உங்களுக்காக சண்டை போட்டுக்கொள்வதுபோல் தோன்றலாம்,’ என்கிறார்.

 

இதைத்தொடர்ந்து பேசும் கவின் ’நண்பர்கள் என்ற முறையில்தான் இருவரிடமும் நான் பேசினேன். ஆனால் இருவரும் என்னை புரிந்துகொள்ளாமல் பிரிந்து சென்றுவிட்டனர் என்று கூறினார். இதற்கு பதிலளித்த தர்ஷன் ‘ ஆண்கள் மனநிலையிலிருந்து பெண்கள் மனதை புரிந்துகொள்வது கஷ்டம். இதை இப்படியே விட்டுவிடுங்கள். எப்போதும்போல் இருவரிடமும் பேசுங்கள்’ என்றார்.

 

இதைத்தொடர்ந்து ’டிக் டிக்’ என்ற டாஸ்க் மீண்டும் நடைபெற்றது. இந்த முறை 22 நொடிகளுக்குள் 15 கடிகாரங்களில் ஒலிக்கும் அலாரத்தை அணைக்க வேண்டும். இந்த முறை அபிராமி மற்றும் கவின் விளையாடினார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் இந்த டாஸ்கை செய்யாததால், எந்த மதிப்பெண்களும் வழங்கப்படவில்லை.

 

இதைத்தொடர்ந்து 33 கடிகாரங்களில் ஒலிக்கும் அலாரத்தை 44 நொடிகளுக்குள் அணைக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் தர்ஷன் மற்றும் சாக்‌ஷி கலந்துகொண்டு விளையாடினார்கள் ஆனால் இவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் டாஸ்கை முடிக்காததால் எந்த மதிப்பெண்களும் வழங்கப்படவில்லை.

 

இதைத்தொடர்ந்து ’நீயா நானா’ என்ற தலைப்பில், பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய லாஸ்லியா ‘ இங்கு சிலர் யாருடன் எந்த உறவு முறையில் பேசுகிறார்கள் என்பதை நேராக சொல்லிவிட்டால். சிக்கல் வராது என்றும் ஆனால் அவர்கள் அப்படி நேராக பேசவில்லை என்றும் கூறினார்.

 

இதைத்தொடர்ந்து இந்த வீட்டில் இருப்பது ’நட்பா அல்லது நட்புக்கு மேல் புனிதமானதா’ என்ற தலைப்பு போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த தலைப்பில் பேசும் கவின், தனக்கு காதலைவிட நட்புதான் முக்கியம் என்கிறார்.  நட்பைவிட மேலாக இருந்தால் சிலர் என்னை புரிந்துகொண்டிருப்பார்கள் என்கிறார். குறுக்கிட்டு பேசும் லாஸ்லியா நட்பைவிட மேலானது என்ற உணர்வு வருகிறது என்றால் அது யார் மீது ஏற்படுகிறது என்று சொல்ல வேண்டும் என்கிறார். இதைத்தொடர்ந்து வீட்டில் இருப்பது நட்பைவிட மேலானது என்று சொல்லி, இங்கே நடக்கும் சம்பவங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று மோகன் வைத்யா கூறுகிறார்.

 

இதைத்தொடர்ந்து சாக்‌ஷியிடம் கவின் தனியாக பேசுகிறார். தன்னிடம் நெருக்கமாக இருந்ததற்கு பெயர் நட்பா ? என்று சாக்‌ஷி கேட்கிறார்.  ’இப்படித்தான் நீ பார்க்கும் எல்லா பெண்களிடமும் நடந்து கொள்வாயா என்று சாக்‌ஷி கேட்கிறார். கவினோ ‘ தனக்கு முதலில் ஒரு நெருக்கம் ஏற்பட்டது என்றும் ஆனால் அதை வளரவிட நான் விரும்பவில்லை என்றும் கூறினார். உடனே சாக்‌ஷி ‘ அப்போ நான் உனக்கு ஸ்பெஷல் இல்லை’ என்று கேட்கிறார். அதற்கு கவின் ‘ அப்படியெல்லாம் இல்லை’ என்கிறார். உடனே கோபித்து கொள்ளும் சாக்‌ஷி ‘ இனி உன்னை தொல்லை செய்ய மாட்டேன். நீ யாருடன் வேண்டுமானாலும் பேசு. என்ன வேண்டுமானாலும் செய்துகொள். இனி நாம் பேசிக்கொள்ள வேண்டாம்’ என்று கூறிவிடுகிறார். 

 

அச்சச்சோ....! இப்படி செய்தால் எப்டி?

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...