???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காதலை கைவிட்ட பிக்பாஸ் குழுவினர்: தெருக்கூத்துக் கலைஞர்களை கொண்டாடிய பிக்பாஸ்!

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   29 , 2019  00:52:51 IST


Andhimazhai Image

பிக்பாஸின் நேற்றைய எபிசோட் தொங்கியதும் வனிதாவிடம் ஷெரின் பேசிக்கொண்டிருப்பது காட்டப்பட்டது. ’’ஆண்கள் அனைவரும் ஒரு குழுவாக இருக்கிறார்கள். என்னை எந்த காரணமும் இல்லாமல் ஒதுக்குகிறார்கள்.

 

ஏற்கனவே தனிமையிலிருந்து தப்பிக்கத்தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்தேன். ஆனால் இங்கேயும் தனிமை என்றால் என்னால் தாங்கிக்கொள்ள இயலாது’ என்று ஷெரின் கூறினார். இதற்கு வனிதா ’ இத்தனை கேமிராக்கள் முன்பு இவர்கள் நடிக்காமல் இருக்கிறார்கள் என்று நீ நம்புகிறாயா? நட்புதான் முக்கியம் என்று வெளிக்காட்டிக்கொண்டு பெண்களை வெளியே அனுப்பிவிட்டு. அவர்கள் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கெல்லாம் நீ வருத்தப்படுவது சரியில்லை’ என்று கூறினார் .

 

இதைத்தொடர்ந்து லாஸ்லியாவிடம் கவின் மனம் விட்டுப் பேசினார் ‘நான் 3 வருடங்கள் ஒரு பெண்ணை காதலித்தேன். 4 மாதங்கள் மட்டுமே நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். மற்ற நேரங்களில் சண்டையும் சச்சரவும்தான். அவர்தான் வேண்டாம் என்று உறவை முறித்துக்கொண்டார். அவரை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால் செல்போனில் என்னை பிளாக் செய்துவிட்டார். இனி நீதான் யோசிக்க வேண்டும் ‘’ என்றார். 

 

இதை கவின் கூறியதும் லாஸ்லியா சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து ‘ உனக்கு சரி என்றால் எனக்கும் சரி. இதற்கு மேலே வெளியே சென்று பேசிக்கொள்வோம்’ என்றார்.

 

இதைத்தொடர்ந்து மீண்டும் கிராமிய டாஸ்க் தொங்கியது. காளீஸ்வரன் ஆசான், தர்மபுரி ஸ்ரீனிவாச நாடக மன்றத்தின் ஆசிரியர் ராமகிருஷ்ணனை அறிமுகம் செய்தார். இதைத்தொடர்ந்து தெருக்கூத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

 

தெருக்கூத்தின் முக்கியத்துவம்

 

மனிதனின் உடல் மொழி வளர்வதற்கு முக்கியமான காரணமாக இருந்தது தெருக்கூத்து கலைதான். இன்று திரையுலகத்தில் இருக்கிற மிகப்பெரிய ஆளுமைகள் எல்லாம் தெருக்கூத்தின் வழியாக தங்களது உடல் மொழியை வளர்த்துக்கொண்டவர்கள். தெருக்கூத்தின் பாரம்பரியம்  500 வருடங்களுக்கு மேற்பட்டது. 12 மாவட்டங்களில், ஒன்றரை லட்சத்திற்கும் மேலாக தெருக்கூத்து கலைஞர்கள் இருக்கிறார்கள். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து குழுக்கள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது 400 முதல் 500 குழுக்கள்தான் இருக்கிறது.

 

உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர்களும் தெருக்கூத்தை ஆடுகிறார்கள். ஒடுக்கிவைக்கப்பட்டவர்களும்  வறுமையில் வாடும் மக்களும் தெருக்கூத்தை நிகழ்த்துகிறார்கள். வறுமையில் வாடும் மக்கள் ஆடும் கூத்தை கணியன் கூத்து என்றும் வசதிப்படைத்தவர்கள் ஆடும் கூத்தை ஊலி கூத்து என்றும் கூறுவார்கள்.

 

இதைத்தொடர்ந்து  ஸ்ரீனிவாச நாடக மன்றத்தின் குழுவினர் தெருக்கூத்தை நிகழ்த்திக்காட்டினர். தொடர்ந்து போட்டியாளர்கள் கலைக்குழுவுடன் சேர்ந்து தெருக்கூத்து பயிற்சி பெற்றனர்.

 

பயிற்சி முடிந்தபின் இரு அணிகளாக பிரிந்து தெருக்கூத்தை நிகழ்த்திக்காட்டினர்.

 

 இத்தனை நாட்களில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் இதுதான் சிறந்தது என்று நெட்டீசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நல்லவரா? இல்லை கெட்டவரா? தெரியலையே பாஸ்!

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...