???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: வீட்டின் தலைவர் ஆவாரா அபிராமி?

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   08 , 2019  01:03:53 IST

பிக்பாஸ் வீட்டில் முதலாவதாக யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கியது பிக்பாஸின் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள். எப்போதும் மக்களின் கருத்து ஞாயிறு எபிசோடில்தான் வெளியாகும் அதுபோலத்தான் இந்த முறையும் நடந்தது.
 
 
ஆனால் சனிக்கிழமை வேறு ஒரு சுவாரஸ்யமான விடயமும் நடந்தது. பிக்பாஸ் போட்டியாளர்களிடம் நீங்க யாரை வெளியேற்ற நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. இதில் அதிக ஓட்டுகள் மதுமிதாவிற்குதான் சென்றது. இதில் திருப்பம் என்ன வென்றால் மக்கள் மதுமிதாவை காப்பாற்றிவிட்டதாக கமல் அறிவித்தார். இதை கேட்டத்தும் மதுமிதா கதறி அழுதார்.
 
 
இதுபோதாதா!.. சாக்‌ஷி, ஷெரின், வனிதா, ரேஷ்மா ஆகியோர் இந்த முடிவால் கடுப்பானார்கள். இதுமட்டுமில்லாமல் வேறு ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது. அபிராமியின் நண்பர்களான ஷெரின், சாக்‌ஷி, வனிதா அனைவரும் மதுவைதான் வெளியேற்ற வேண்டும் என்று வாக்களித்தனர். ஆனால் அபிராமி மீராவை வெளியேற்ற  விரும்புவதாக கூறிவிடவே, வனிதா மற்றும் மற்றவர்கள் ஷாக் ஆனார்கள். இதனால் கோபம்கொண்ட ஷெரின், சாக்‌ஷி அபிராமியிடம் சண்டையிட்டனர்.
 
 
இந்த சண்டையை வனிதா மேலும் அதிகப்படுத்தினார். அபிராமியிடம் ‘உனக்காகத்தான்  மதுவிடம் நாங்கள் சண்டைபோட்டோம். எங்களுக்கு மதுவிடம் நேராக எந்த பகையும் இல்லை’’ என்று வனிதா கூறவே, சாக்‌ஷி மற்றும் ஷெரின் அபிராமியை சுயநலமாக நடந்துகொள்கிறார் என்று கூறினர். இதை கேட்ட அபிராமி அழத்தொடங்கினார். உடனே வீட்டில் இருந்து தான் வெளியேற விரும்புவதாக பிக்பாஸிடம் அழுது கொண்டே கேட்டார்.
 
 
இதைத்தொடர்ந்து ஒருவழியாக அபிராமி சமாதானம் அடைந்தார். மதுமிதா காப்பாற்றப்பட்டார் என்ற முடிவை சனிக்கிழமை வெளியிட்டால் வீட்டில் மேலும் சண்டை எழும் என்று பிக்பாஸ் அறிந்திருந்தார் போலும்.
 
 
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முதலில் வெளியேறப்போவது பாத்திமா பாபுதான் என்ற செய்தி இணையதளத்தில் வைரலாக பரவியது. அதைப்போலவே பாத்திமா பாபுதான் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சிக்கு இடையில் கமல் பேசியபோது, மொத்தம் 10 கோடி மக்கள் வாக்குகள் அளித்ததாக கூறினார். மக்களின் கோபம் முழுக்க கவின் மற்றும் சாக் -ஷியின் மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டது எதிர்பாராத திருப்பமாக இருந்தது.
 
 
பாத்திமா பாபு வெளியேற்றப்படுவார் என்ற செய்திகேட்டதும், வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அதிர்ச்சியானார்கள் தர்ஷன், மோகன் வைத்யா அழுதார்கள்.கமலிடம் வந்து பேசிய பாத்திமா பாபு வீட்டில் அதிகம் ஆதிக்கம் செலுத்துபவர் வனிதா என்றும் மோகன் வைத்யா அவருக்கு  கைப்பாவையாக இருக்கிறார் என்றும் கூறினார்.
 
 
மேலும் அபிராமி இப்போதுதான் வனிதாவின் உண்மையான முகத்தை புரிந்துகொண்டார் எனவும் கூறினார். பாத்திமா பாபுவுக்கு சிறப்பு உரிமை அளித்து, பிக்பாஸ் வீட்டின் அடுத்த வாரத்தின் தலைவர் பதவிக்கு மூவரை அவர் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார் கமல். தர்ஷன், அபிராமி, சாண்டி என்ற பெயர்களை பரிந்துரை செய்தார் பாத்திமா பாபு. தேர்வு செய்துவிட்டு அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துச் சொன்னார் பாத்திமா பாபு.
 
 
இந்த தேர்வால் நிகழ்ச்சி மேலும் விறுவிறுப்பாக நகரும் என்று  பாத்திமா பாபுவுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்போலும். மேலும் இந்த மூவரில் ஒருவரை தேர்வு செய்வதற்கு போட்டி நடத்தப்படும் என்று கூறப்பட்டது. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...