???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -2 -அருள்செல்வன் 0 அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -1 -அருள்செல்வன் 0 இலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி! 0 இரண்டாமாண்டு நினைவு தினம்:கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு 0 உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆவணங்கள் மாயம் 0 தமிழகம்:5684 பேருக்கு தொற்று; 110 பேர் உயிரிழப்பு 0 பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹10 லட்சம் அபராதம்! 0 எஸ்.வி.சேகர் யார்? அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார்?: முதலமைச்சர் 0 டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் இல்லை: உயர்நீதிமன்றம் 0 மகிந்த ராஜபக்சவுக்கு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து! 0 சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை! 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ் : ஷெரினை தேவதை என்று வர்ணித்த தர்ஷன்!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   11 , 2019  03:28:56 IST

பிக்பாஸின் நேற்றைய எபிசோட் நகைச்சுவையாக சென்றது. சாக்‌ஷி, மோகன் வைத்யாவை தொடர்ந்து ரேஷ்மா,  ஷெரின் ஆகியோர் கொலை(!) செய்யப்படுகிறார்கள்.

 

தொடக்கத்தில் வனிதாவிடம்  கொடுக்கப்பட்ட தொலைபேசியில் பிக்பாஸ் அடுத்து ஷெரினை கொலை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.  ஷெரின் தர்ஷனுக்கு முத்தம் கொடுக்கும்படி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

 

இதைத்தொடர்ந்து சமையலில் தனக்கு உதவ யாராவது வேண்டும் என்று வனிதா கூறுகிறார்.  ஷெரின் தான் வருவதாக சொல்கிறார்.  மேலும் ஷெரினுக்கு உதவியாக தர்ஷன் இருக்கட்டும் என்று கூறும் வனிதா, தர்ஷனுக்கு சும்மா ஒரு முத்தம் கொடுங்க ஷெரின் என்று கூறுகிறார். தர்ஷனும்  விளையாட்டாக கையை நீட்டுகிறார்.  ஷெரினும் அவரது கையில் முத்தம் கொடுக்கிறார்.

 

இதைத்தொடர்ந்து ஷெரின் இறந்துவிட்டதாக பிக்பாஸ் அறிவிக்கிறார்.  உச்சிவெயிலில் ஷெரின், சாக்‌ஷி, மோகன் வைத்யா மயானத்தில்  அமர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் தங்களை தேவையின்றி மதுமிதா கேலி செய்கிறார் என்று ஷெரின் மற்றும் சாக்‌ஷி, மோகன் வைத்யாவிடம் கூறுகின்றனர். இதைத்தொடர்ந்து வீட்டின் கேப்டனான அபிராமியிடம்  தங்களை கேலி செய்ய வேண்டாம் என்று மதுவிடம் அறிவுறுத்த சொல்கிறார் சாக்‌ஷி.

 

இதைத்தொடர்ந்து மதுவிடம் பேசும் அபிராமி ‘ சாக்‌ஷி மற்றும் ஷெரினை கேலி செய்ய வேண்டாம்’ என்று சொல்கிறார்.

 

இதைத்தொடர்ந்து அடுத்த கொலையை செய்யுமாறு வனிதாவுக்கு பிக்பாஸ் அறிவிக்கிறார்.  கோல்டு காப்பியை ரேஷ்மா மீது கொட்டும் படி செய்ய வேண்டும் என்று வனிதாவிடம் பிக்பாஸ் சொல்கிறார்.

 

இதைத்தொடர்ந்து வெயிலில் தவிக்கும் ஷெரின், சாக்‌ஷி, மோகன் வைத்யாவிற்கு  கோல்டு காப்பியை தயாரிக்கிறார் வனிதா. இதைத்தொடர்ந்து முகெனின் உதவியோடு ரேஷ்மாவின் மீது காப்பியை கொட்டுகிறார் வனிதா.

 

இதைத்தொடர்ந்து ரேஷ்மாவும் கொலை செய்யப்பட்டுவிட்டதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். கொலை செய்யப்பட்டு இறந்தவர்களைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டும் என்றும் இந்த டாஸ்க்கை நகைச்சுவையாக செய்துமுடிக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார்.

 

சாண்டி மற்றும் சேரன் இந்த டாஸ்க்கை நகைச்சுவையாக கொண்டு சென்றனர்.  ஆனால் மதுமிதா பேசியது மேலும் சர்ச்சைக்கு வித்திட்டது. சாக்‌ஷியை பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்பே தெரியும், அவர் வெளியே நன்றாக நடிப்பார் அதுபோலவே, வீட்டிலும் நன்றாக நடிக்கிறார். கவினை காதலிப்பதுபோல் நன்றாக நடிக்கிறார் என்று கூறினார்.

 

இதை அவர் நகைச்சுவையாக சொன்னாலும் இனி வரும் நாட்களில் இதுதான் முக்கிய சர்ச்சையாக வெடிக்கும் என்று வெளிப்படையாக தெரிந்தது.

 

இதைத்தொடர்ந்து பேசிய தர்ஷன் ஷெரினை பற்றி நகைச்சுவையாக பேசுகிறார். கிடைத்த இடைவேளையில் கிடா  வெட்டுவதுபோல.. ஷெரினை டார்லிங் என்றும் தேவதை என்றும் வர்ணிக்கிறார்

.

இதைத்தொடர்ந்து சமையலறையில் ஷெரின் மற்றும் தர்ஷன் அமர்ந்து கொண்டு பேசிக்கொள்கிறார்கள். உங்களால் தான் எனக்கு தடுமாற்றம் ஏற்படுகிறது என்று தர்ஷன் சொல்கிறார். உடனே ஷெரின் வெட்கப்பட்டு சிரிக்கிறார்.  போச்சு!

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...