???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இரவு முழுக்க கண் விழித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   19 , 2019  04:28:35 IST

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோட் முழுவதும்  டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் தான்!

                                 

போட்டியாளர்கள் அனைவருக்கும் சணலாலான பை  கொடுக்கப்படும். அந்த பையில் தர்மாக்கோல் உதிரிகளாக நிறைத்து வைக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் எண் ஒன்றிலிருந்து  ஏழு வரை வரிசைப்படுத்தப்படுவர். தர்மாக்கோல் நிறைந்த பையை தோளில் மாட்டிக்கொண்டு அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட எண்களின் வரிசையில் ஓட வேண்டும். அப்படி ஓடும்போதும் மற்றவர்கள் பையில் இருக்கும் தர்மாக்கோலை வெளியே கொட்டும்படி செய்ய வேண்டும்.

 

இந்த போட்டியில் சேரன் தன்னால் விளையாட முடியாது என்று சிறிது நேரத்தில் வெளியேறினார். தர்ஷனின் பையில் இருந்த தர்மாக்கோல் முழுவதுமாக காலி ஆனதால் அவரும் வெளியேறினார். தொடர்ந்து லாஸ்லியா, சாண்டியும் வெளியேறினர். இறுதியாக ஷெரின், முகென்,  கவின் ஆகியோர் போட்டியை தொடர்ந்து விளையாடினர்.

 

ஷெரின் பையிலிருந்த தர்மாக்கோல் காலியானதால் அவரும் போட்டியிலிருந்து வெளியேற,  இறுதியாக முகென் போட்டியில் வெற்றிபெற்றார்.

 

தொடர்ந்து சாண்டி பாட்டியை வைத்து கதை சொன்னார். நேற்று அவர் சொன்ன ’கேனோஸ்’ கதையைவிட மொக்கையாக இருந்தது.

 

இதன்பிறகு போட்டியாளர்கள் முகம் பதித்த பசில் பிளாக்குகள் கொடுக்கப்பட்டது. இந்த பிளாக்குகளை போட்டியாளர்கள் அடுக்க வேண்டும். அப்படி அவர்கள் அடுக்கும்போது பந்துகளை வைத்து மற்ற போட்டியாளர்கள் அடுக்கிய பிளாக்குகளை கலைக்க வேண்டும்.

 

இந்த போட்டியில் சேரன் மற்றவர்களின் பிளாக்குகளை கலைக்காமல் தனது பிளாக்குகளை ஒழுங்காக அடுக்கி வைத்தார். மேலும் மற்றவர்கள் தாக்குதலில் இருந்து தனது பிளாக்குகளை காப்பாற்றினார். இந்த போட்டியில் சேரன் 7 மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றார்.

 

தொடர்ந்து சாண்டியும் லாஸ்லியாவும் மற்றவர்கள் மதிப்பெண்களை பற்றி பேசிக்கொண்டனர். அப்போது சாண்டி ‘ நீ ஷெரினை டார்கெட் செய்யலாம். அவரின் ஒட்டுமொத்தம் மதிப்பெண் 28 என்றார்’. இதற்கு லாஸ்லியா ‘ அப்படியா ..’என்றார். 

 

இப்போதெல்லாம் பிக்பாஸ் நகைச்சுவையாக பேசுகிறார். முகெனை அழைக்கும்போது ‘ வாயா முகென்.. கன்பெஷன் அறைக்கு வாயா ‘ என்று அழைத்தார்.

 

மேலும் சாண்டி கதை சொல்லும்போது மைக்கை சரியாக மாட்டிக்கொள்ளவில்லை. அதற்கு பிக்பாஸ் ‘ நீங்கள் மற்றவர்கள் எந்த பவர் கொடுத்தாலும். சரி . முதலில் மைக்கை சரியாக மாட்டிக்கொண்டு பவர் கொடுங்கள் என்றார்’

 

இறுதியாக நள்ளிரவு 1.30க்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. எல்லா போட்டியாளர்களுக்கும் தங்க முட்டை கொடுக்கப்படும். அதை போட்டியாளர்கள் பத்திரமாக பார்த்துகொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் மற்றவர்களின் தங்க முட்டையை அவர்களுக்கு தெரியாமல் உடைக்க வேண்டும்.

 

இதனால் போட்டியாளர்கள் இரவு முழு தூங்காமல் தங்க முட்டையை பாதுகாத்தனர்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...