???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறப்போவது யார் ?

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   17 , 2019  04:14:38 IST

பிக்பாஸ்வீட்டின் நேற்றைய எபிசோடில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தொடங்கியது. பிக்பாஸ்வீட்டில் போட்டியாளர்கள் 80 நாட்களை கடந்துவிட்டதாக அறிவித்த பிக்பாஸ் இனி கடுமையான டாஸ்க்குகள் இருக்கும் என்றார். மேலும் தந்தை, நட்பு போன்ற உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தனிநபராக போட்டியில் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் நேற்று முதல் டிக்கெட்  டூ ஃபினாலே டாஸ்க் தொடங்கியது. இந்த டாஸ்கில் வெற்றிபெறும் போட்டியாளர் நேரடியாக கடைசி போட்டிக்கு செல்வார்.

 

இந்த வாரம் நாமினேஷன் நடைமுறை நேற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொருவரும் பின்வருமாறு நாமினேட் செய்தனர்.

 

சேரன்: சாண்டி , கவின்

 

ஷெரின்: கவின் லாஸ்லியா

 

சாண்டி: சேரன், ஷெரின்

 

லாஸ்லியா: முகென், ஷெரின்

 

தர்ஷன்: கவின், லாஸ்லியா

 

முகென்: சேரன், லாஸ்லியா

 

 கவின்:  சேரன், ஷெரின்

 

இறுதியாக இந்த வாரம் நாமினேட் செய்யப்படும் பட்டியலில் சேரன், ஷெரின், லாஸ்லியா, கவின் ஆகியோர் இடம் பிடித்தனர். தொடர்ந்து டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்றது. போட்டியாளர்கள் அனைவரும் இரு கால்களிலும் பலூனை கட்டிக்கொள்ள வேண்டும். தங்கள் பலூனை காப்பாற்றிக்கொண்டு மற்றவர்கள் பலூனை உடைப்பதுதான் இந்த டாஸ்க். இதில் முதலில் கவின் வெளியேறினார். தொடர்ந்து முகென், சேரன், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் வெளியேறினர். தர்ஷனின் ஒரு பலூனை சாண்டி உடைத்தார். சாண்டியின் இரண்டு பலூன்களும் உடைக்கப்படவில்லை. தர்ஷனும் சாண்டியும் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக பலூன்களை உடைக்க முயற்சிசெய்தனர். இதில் தர்ஷனுக்கு வாயிலும் காலிலும் காயம்பட்டது. மேலும் சாண்டிக்கும் காலில் காயம். இறுதியாக சாண்டியின் பலூன்களை தர்ஷன் உடைத்தார்.

 

 

தொடர்ந்து ஹலோ செயலியின் கயிறு இழுக்கும்போட்டி நடைபெற்றது. இதில் தர்ஷன், கவின், லாஸ்லியா அணி வெற்றிபெற்றது.

 

இறுதியாக யார் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று போட்டியாளர்கள் மற்ற போட்டியாளரக்ளை  7 எண்களுக்குள் மதிப்பீடு செய்ய வேண்டும். பெரும்பாலான போட்டியாளர்கள் முதல் இடத்தை தர்ஷனுக்கு வழங்கினார்.

 

கடைசி இடத்தை கவினுக்கு கொடுத்தனர். சோகமாக இருந்த கவின் ஷெரினை வெறுப்பேற்றி விளையாடினார். அவரை செல்லமாக வம்புக்கு இழுத்தார்.

 

இதுமட்டுமில்லாமல் லாஸ்லியாவும் கவினும் தனியாக பேசிக்கொண்டனர். நாமினேஷன் நடைமுறை முடிந்ததும் வருத்தமாக இருந்த கவினிடம் லாஸ்லியா பேசினார். அப்போது கவின் ‘ நீ கமல் சாரிடம் இது எல்லாம் உண்மையா? பொய்யா ? என்று தெரியவில்லை என்றுதானே சொன்னாய்’ என்றார். அதற்கு லாஸ்லியா ‘சேரன் அப்பாவைப்பற்றிதான் கூறினேன்’ என்றார். மேலும் நண்பர் சொன்னதை மனதில் வைத்துகொண்டு விளையாடு என்றார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...