???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கவினைவிட வனிதாவுக்கு குறைந்த வாக்குகள் எப்படி? பிக்பாஸ் திட்டமா? மக்கள் கருத்தா?

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   16 , 2019  03:22:40 IST

பிக்பாஸ் வீட்டிலிருந்து மீண்டும் வனிதா வெளியேற்றப்பட்டுள்ளார். நேற்றைய எபிசோடின் தொடகத்தில் ஐந்தாம்  மற்றும் எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு நடத்தப்படக்கூடாது என்று கமல்  கூறினார். ’பொதுத் தேர்வுகளை திணிப்பதால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள். வளர்ந்த நாடுகளில் தேர்வு முறையை ரத்து செய்து வரும் காலத்தில் பொதுத் தேர்வை திணிப்பது சரியா ? என்று நாம் யோசித்து பார்க்க வேண்டும்’ என்றார் கமல்.

 

மேலும் பேசியவர் ‘ பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் அவர்களின் குடும்பத்தினரை பார்த்ததால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் இப்போது ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்காது. அது சுபஸ்ரீ குடும்பம் என்றும் கூறினார். மேலும் இதில் பெரும் அரசியல் இருக்கிறது. தனிமனிதர்களிடத்திலும் மாற்றம் வேண்டும்’ என்றார்.

 

இதைத்தொடர்ந்து தர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கமல் தெரிவிக்க வேண்டும் என்று சேரன் கூறினார். ’நானே சொல்லவேண்டும் என்று நினைத்தேன். சிறிது நேரம் கழித்து சொல்லலாம் என்றிருந்தேன்’ என்றார் கமல். தொடர்ந்து தர்ஷனுக்கு வீடியோ மூலம் அவரது தாயும் தந்தையும் பாட்டியும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று முகெனுக்கு அவரது சகோதரர் காணொலி காட்சி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

 

இதைத்தொடர்ந்து திடீரென்று பிக்பாஸ் குரல் ஒலித்தது. ‘ கமல் சார் உங்களுக்கும் ஒரு குறும்படம் இருக்கிறது ‘என்றார் பிக்பாஸ். கமலின் சகோதரர் சாருஹாசன் பேசினார் ‘ வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் சினிமா தியேட்டரில் எப்போதும் கமல் படம் பார்ப்பார். சினிமாத்துறைக்குத்தான் கமல் செல்ல வேண்டும் என்பதில் எனது தந்தை உறுதியாக இருந்தார்.  எம்ஜிஆர் திரைப்படத்தை 100 நாட்களுக்கு மேலாக பார்த்ததற்கு 3 வயதில் கமலுக்கு மிட்டாய் பரிசாக கிடைத்தது. நன்றாக படித்துகொண்டிருந்தவரை வேலைக்கு செல்லுமாறு எனது தந்தை கூறினார். அப்போது கமல் படிக்க வேண்டும் என்றும் அவர் மாவட்ட ஆட்சியராக வர வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் சினிமாத்துறையில் அவர் சென்றதால்தான் இன்று பிரபலமாக இருக்கிறார். சினிமாத்துறையில் பல ஆளுமைகளை சந்தித்து அவர்களுடன் அனுசரித்துப்போக வேண்டும். அதில் வரும் இடையூறுகளை சந்திக்க வேண்டும். அதில் கமலுக்கு பல அனுபவங்கள் கிடைத்துள்ளன’ என்றார்.

 

 ‘சாருஹாசன் எனக்கு அண்ணன் மட்டுமல்ல தந்தையும் நண்பரும் கூட’ என நெகிழ்ந்தார் கமல் .

 

 

பிறகு  காப்பாற்றப்படும் போட்டியாளர்களில் முதலில் கவினைக் காப்பாற்றினார். கவின்தான் இந்த முறை வெளியேற்றப்படுவார் என்று பரவலாக கூறப்பட்டது. ஆனால் கவின்தான் முதலில் காப்பாற்றப்பட்டார். கவினின் நண்பர் கொடுத்த அறை அவருக்கு கைகொடுத்திருக்கிறது. இறுதியாக வனிதா வெளியேற்றப்படுவதாக அறிவித்தார் கமல். இந்த அறிவுப்பு சேரனை பாதித்தது. ’பார்வையாளர்களை புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று சேரன் கூறினார்.

 

இன்முகத்தோடு வனிதா வெளியேறினார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...