???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ் : நாள் 4-’’பிழிய பிழிய கண்ணீர்’’

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   28 , 2019  04:03:51 IST

'’ஹார்ட்டுல பச்ச குத்தியே’’ பாடலுக்கு அனைத்து பிக் பாஸ் போட்டியாளர்களும் அவரவர் விருப்பம்போல நடனமாடினர். இதனைத்தொடர்ந்து எல்லா போட்டியாளர்களுக்கும் மீரா மிதுன் மாடலிங் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும் என்று பிக் பாஸ்  டாஸ்க்கு வழங்கினார்.

 

அதுபோல அனைவருக்கும் அவர் ’ராம்ப்  வாக்’ எப்படி செய்வது என்று கற்றுக்கொடுத்தார். இறுதியில் வரிசையாக அனைவரும் நடத்தனர்.  மோகன்  வைத்தியாவும், மீரா மிதுனும்  ஜோடி சேர்ந்து ராம்ப் வாக் செய்தனர்.

 

இதைத்தொடர்ந்து சேரன் அவர் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்தைப்பற்றி கூறினார். மனைவிக்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த இரவில், அவரது மனைவியை சைக்கிளில் வைத்துக்கொண்டு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரது மனைவி வலியில் துடித்தபோது அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறிய அவர் ‘பெண்களின் பிரச்னையை ஆண்களால் எப்போதும் உணர முடியாது’’ நானும் அப்படிதான் அப்போது இருந்தேன். இதுபோன்ற  நேரங்களில் ஆண்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதே தெரியாது என்று கூறினார்.

 

அவரது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும், அதனால் உடனே பணம் செலுத்துங்கள் என்று மருத்துவர் அவரிடம் கூறியிருக்கிறார். அடித்துபிடித்துகொண்டு சைக்கிளில் அவர் நண்பர் வீட்டு சென்றுள்ளார் சேரன்.  தூங்கிக்கொண்டிருந்த நண்பனை எழுப்பி பணம் கேட்டுள்ளார்.  அவர் உடனடியாக 2 ஆயிரம் ரூபாய்யை சேரனுக்கு கொடுத்துள்ளார்.

 

இந்த பணத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வதற்குள் அவரது மனைவிக்கு சுகபிரசவம் ஆகியிருக்கிறது.கடவுள் தனக்கு கஷ்டம் கொடுத்தாலும் இறுதியில்  நன்மையான  முடிவை கொடுப்பார் என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து தர்ஷன் தியாகராஜா தனது பெற்றோர்களைப்பற்றி பேசினார். வேலைக்கு போவதும், உடல் பயிற்சி செய்வதும் என்று வாழ்க்கை சென்றுகொண்டிருந்தபோது, மற்றவர்கள் இவரை மாடலிங் துறையில் சென்றால் என்ன என்று கேட்டுள்ளனர். இதனால் மாடலிங் துறையில் நுழைந்தார்.

 

மிஸ்டர் இலங்கை பட்டத்தை வென்ற பிறகு, இவர் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்ட மற்றவர்கள் இவருக்கு வரும் எல்லா ஸ்பான்சர்களையும் பேசி மனம் மாற்றம் செய்துள்ளனர். மேலும் இவர் மாடலிங்யில் வெற்றிபெற அவரின் மேலாளருடன்  தகாத உறவில் இருந்ததாகவும் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. என்னால் சிறந்த மாடலாக முடியாவிட்டாலும் பரவாயில்லை ஒரு முறையாவது நான் விமானத்தில் போக வேண்டும் என்று எனது அம்மா எனக்கு பணம் கொடுத்தார்.

 

மேலும்  ரூ 8 ஆயிரம் சம்பளம் வாங்கும் எனது தங்கை, பணத்தை எனக்காக சேமித்து 60 ஆயிரம் வரை எனது கனவு நிறைவேற பணம் கொடுத்தார். இவர்களை என் வாழ்நாள் இருக்கும் வரை மறக்க மாட்டேன். யாழ்பாணத்தில் பேருந்தில் சென்றபோது தர்ஷனின் அம்மாவிற்கு குண்டடிப்பட்டுள்ளது, அப்போது அவர் கர்ப்பமாக இருந்தாகவும் ஒரு நாள் முழுக்க வலியுடன் தவித்தபிறகு அடுத்தநாள்தான் அவர் உடலில் இருந்த புல்லெட் அகற்றப்பட்டது என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து பேசிய மதுமிதா, எனது வீட்டில் 5 பெண் குழந்தைகள், ஒருவர் இறந்துவிட்டார்.  நானும் பெண் குழந்தையாக பிறந்ததால் எனது தந்தை வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனால் சிறு வயது முதல் எனது அம்மா மிகவும் கண்டிப்பாக என்னை வளர்த்தார். அப்பாவின் புகைப்படத்தை பார்த்தால் நாங்கள் அழுது விடுவோம் என்பதற்காக அவரது புகைப்படத்தைகூட அம்மா காட்டமாட்டார். எனது ஆசையெல்லாம் எனது அப்பாவை பார்க்க வேண்டும்? என்னை விட்டு ஏன் அவர் சென்றார் என்று கேட்க வேண்டும் என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து  சரவணன் பேசினார்’ சுமார் 4 வருடங்கள் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தேன். இறுதியில் எனது காதலை ஏற்றுக்கொண்டார். படம் எடுத்து எல்லாம் நஷ்டம் ஆனதும், என்ன செய்வது என்று தெரியாமல் மொட்டை அடித்தேன். செல்போனை அணைத்துவிட்டு எதோ இரு கோவிலிக்கு சென்றுவிட்டேன்.  அதன்பிறகு அவளை அழைத்து என்னிடம் ஒன்றும் இல்லை முடிந்தால் என்னை திருமணம் செய்துகொள் என்று கூறினேன்.

 

அவள் என்மீதுகொண்டுள்ள காதலால் என்னை திருமணம் செய்துகொண்டாள். அவள்தான் எனது எல்லா செலவுகளையும் பார்த்துக்கொள்வாள். குடிப்பதற்கும் அவள் பணம் கொடுப்பாள். குழந்தை இல்லை என்பதால் எனது பெற்றோர்கள் என்னை இரண்டாவது திருமணம் செய்யச் சொன்னார்கள்.  எனது இரண்வாது திருமணத்திற்கு முதல் மனைவிதான் தாலி எடுத்துக்கொடுத்தார்.  எனக்கு குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆகிறது. இனி எனது மகனுக்காகத்தான் எனது மீதி வாழ்க்கை என்று கூறினார்.

 

 

 

 

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...