???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: நாள் 7: தமிழ் பெண்கள் இப்படி செய்வார்களா? மதுமிதாவின் கேள்வியால் கதறி அழுத அபிராமி

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   01 , 2019  08:21:27 IST

பிக் பாஸ் வீட்டில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் எப்போதும் கமல் வருகை இருக்கும். அதுபோலத்தான்  நேற்றும் நடைபெற்றது.

 

கிராமத்தில் கூடும் பஞ்சாயத்துபோல் நேற்றைய எபிசோட் விறுவிறுப்பாக சென்றது. முதல் வாரத்தில் குடும்ப தலைவியாக வனிதா இருந்தது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது.  சிலர் தலைமை நன்றாக இருந்தது என்று கூறினார். மீரா மிதுன் வனிதா மீது பல குறைகளை கூறினார்.  தன்னை மட்டும் தனிமைப்படுத்துகிறார். மேலும் எல்லாவற்றுக்கும் கோபம் கொள்கிறார் என்று கூறினார்.

 

இதற்கு இடையில் அபிராமி பாட்டிலுக்கு டையப்பர் போட்டுவிட்டு அதை குழந்தைபோல் பாவித்து அதை முகேனுக்கும் எனக்கும் பிறந்து என்று கூறியது தொடர்பாக மதுமிதா பாத்திமாவிடம்  பேசிக்கொண்டிருக்கிறார். அதில் தமிழ்ப்பெண் இப்படிச் செய்வாரா என்று மதுமிதா கேட்கிறார்.

 

அதை கேட்டதும் அபிராமிக்கு கோபம் வருகிறது. மேலும் அவர் அழத்தொடங்குகிறார். இடைவேளை முடிந்த பிறகு கமல் என்ன அழுகை என்று கேட்டபோது ‘தான் விளையாட்டாக செய்த ஒரு விஷயத்தை தமிழ் கலாச்சாரத்துடன் ஒப்பிட்டு சொல்வது சரியில்லை என்கிறார். மேலும் அபிராமிக்கு ஆதரவாக ஷெரின் பேசுகிறார்.

 

 

சண்டை அதிகரிக்க என்ன செய்வது என்று தெரியாத கமல் நல்ல வேளை நான் தமிழ் பெண்ணில்லை. பெண்ணாக வேடமிட்டுத்தான் நடித்திருக்கிறேன் என்று கூறவே அனைவரும் சிரிக்கின்றனர்.

 

பின்னர் ஸ்டோர் ரூமில் இருந்து பரிசுகள் எடுத்து வர வேண்டும் என்று கமல் கூறுகிறார். அதில் சிவப்பு நிற இதய வடிவ பொம்மைகள் இருக்கின்றன.

 

அவற்றை பிடித்தவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் மனம் கவர்ந்த நபர்களுக்கு கொடுத்து, அதற்கான காரணத்தையும் விளக்குகின்றனர். போட்டியாளர் சரவணனுக்கு அதிக பொம்மைகள் கிடைக்கிறது.

 

இதையடுத்து வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் நேரம் வருகிறது. அதில் மோகன் வைத்யா, முகின் ராவ், மீரா மிதுன், ரேஷ்மா ஆகியோர் நிற்கின்றனர். ஒவ்வொருவரும் தாங்கள் எதற்காக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வாக்குறுதி கொடுக்கின்றனர். இதில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று, மோகன் வைத்யா வீட்டின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.

 

எனவே அவரையும், வனிதாவையும் தவிர மற்றவர்கள் அடுத்த வார எவிக்‌ஷன் நாமினேஷனில்( போட்டியை விட்டு வெளியேறும் நபர் தேர்வு)  இடம்பெறுவர் என்று கமல் அறிவிக்கிறார்.

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...