???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: நாள் 5: கதறி அழுத கவின்…என்ன காரணம் ?

Posted : சனிக்கிழமை,   ஜுன்   29 , 2019  07:20:18 IST

’’சின்ன மச்சான் என் ஆசை மச்சான்’’ என்ற பாடலுடன்  பிக்பாஸ்  5ம் நாள் தொடங்கியது.  நிகழ்ச்சி முழுவதும் குழாயடி சண்டையாக இருந்தது. பாத்திரம்கழுவும் வேலையை செய்ய முடியாது என்று மீரா மிதுன் சொன்னதை வைத்து ஒரு நாள் முழுக்க சண்டை நடந்தது.

 

வடிவேலு சொல்வதுபோல் ’புறாவுக்கு போரா என்னடா அக்கப்போராக இருக்கிறது’ என்பதுபோல்,  பிக்பாஸில் பாத்திரம்  துலக்க சொன்னதால்  ஒரு குட்டிபூகம்பமே வெடித்தது.

 

இரவு அதிகமாக பாத்திரம் இருந்ததாகவும், அதை நான்தான் கழுவினேன் என்று மீராமிதுன் கூறுகிறார். இதனால் என்னால் பாத்திரம் கழுவ முடியாதுஎன்று கூறவே, அதற்கு தலைவி வனிதா அவரை கழிப்பறையை சுத்தம் செய்ய சொல்கிறார். ஆனால் மீரா மிதுன் ‘ நான் பாத்திரம் கழுவ மாட்டேன் என்றுகூறவில்லை என்றும் இரவில் அதிகமாக பாத்திரம் வருகிறது ’என்று கூறுகிறார். இதற்கு இடையில் மதுமிதா மற்றும் ரேஷ்மா அவரவர் கருத்துகளைகூறுகிறார்கள்.


 
இதைப்பற்றி கண்டுகொள்ளாத மீரா மிதுன் மீண்டும் பேசத்தொடங்குவதற்குள், வனிதா குறுக்கிட்டு தான் சொல்வதை கேட்க வேண்டும் என்றுகூறுகிறார்.  இதற்கு மீராவோ ’’ சொல்வதை கேட்பதற்கு நீங்கள் ஒன்றும் எனக்கு அம்மா இல்லை’ என்று கூறிவிட்டு அழுதுகொண்டே வெளியில்செல்கிறார்.

 
இது ஒரு புறம் இருக்க. சமையலறையில் மீரா சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது, மோகன் வைத்தியாவை தனது ஆடையின் பட்டனைபோட்டுவிடுமாறு எதார்த்தமாக கேட்கிறார்.  அதற்கு மோகன் வைத்தியா எதோ சமாளிக்கிறார்.

 
இதைத்தொடர்ந்து அவர் தலைவி வனிதாவிடம் இதை செய்ய முடியாது என்று கூறுகிறார். இதை வனிதா, மீராவிடம் கூறும்போது  அவர் எனக்கு அப்பாமாதிரி என்று சொல்லிவிட்டு..இதுல என்ன இருக்கு ‘’ என்று மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

 
இதைத்தொடர்ந்து வனிதா தனது வாழ்வில் நடந்த சோகமான விஷயத்தை சொல்கிறார்.  தனது மகன்தான்  தனக்கு எல்லாம் என்று கூறும் அவர் அவனைபிரிக்க தனது பெற்றோர்கள் நினைத்ததால்தான் அவர்களிடம் சண்டை போட்டதாக கூறினார். இந்த உலகம் தன்னை ‘ரவுடி வனிதா’வாகத்தான்பார்க்கிறது.  எல்லா விஷயத்திற்கும் பயந்து நடுங்கும் வனிதாவை யாரும் பார்த்ததில்லை. அப்படி பார்த்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும் என்றுகூறுகிறார்.

 
அம்மாவின் இழப்பை மறக்க முடியாத நிகழ்வு என்று கூறிய வனிதா ‘அம்மாவின் இழப்புக்கு பிறகுதான் அவரைப்பற்றி புரிந்துகொண்டேன்’’ என்றுகூறினார்.
 
 
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாயை இறுதியாக அவர்  கையால் ஏந்திக்கொண்டபோது அவரது உயிர் பிரிந்தது’ என்று உருக்கமாக பேசினார். இதைத்தொடர்ந்து பேசிய கவின் ’’கடனால் எனது   குடும்பம்  சொந்த ஊரைவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது. எந்த உறவினர்களும் எனக்குஉதவவில்லை. நண்பர்கள்தான் எனக்கு உதவினர். எனது மாமாவிற்கு மாரடைப்பு வந்தபோது அவருக்கு சிகிச்சை அளிக்கக்கூட என்னிடம் பணம்இல்லை’’ என்று அழுதார்.

 
பாத்திரம் கழுவ சண்டை , கடனால் தவிக்கும் கவின் குடும்பம், மகனை உலகமாக நினைக்கும் ’ரவுடி’வனிதா என்று காரசாரமாக சென்றது பிக்பாஸ்-யின்5வது நாள் எபிசோட்.
 

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...