???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன் 0 தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு 0 குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி 0 அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா?: அமைச்சர் ஜெயக்குமார் 0 எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா 0 கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி! 0 திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் 0 கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! 0 நாடக இயக்குநர் அல்காசி மரணம்! 0 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 0 தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு 0 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு 0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் 0 ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சேரன் காட்டும் பாசம் பொய்யாயனது: லாஸ்லியா

Posted : திங்கட்கிழமை,   செப்டம்பர்   02 , 2019  06:46:07 IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சனி- ஞாயிறு எபிசோட்டில் வழக்கம் போல கமலின் தனித்த ஆளுமை வெளிப்பட்டது. சனிக்கிழமையன்று காளிஸ்வரன் ஆசான் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களை வரவழைத்து அவர்களை பாராட்டினார் கமல். அவரும் வில்லுப்பாட்டு இசைத்துக் காட்டினார். இவர்களை நாம் மறக்கக்கூடாது என்று கூறினார்.
 
சனிக்கிழமையன்று மக்களால் காப்பாற்றப்படும் போட்டியாளர்கள் யார் என்பதை கமல் சொல்லவில்லை.  இந்த வாரம் போட்டியிலிருந்து யாரும் வெளியேற்றப்படமாட்டார்கள் என்பது பார்வையாளர்களுக்கும் கமலுக்கு மட்டுமே தெரியும்.
 
எனவே போட்டியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை சொல்கிறேன் என்று கூறினார் கமல். ஞாயிற்றுகிழமையன்று தங்கம் வென்ற இந்திய வீரங்கனைகளுக்கு வாழ்த்து கூறிய கமல் பெண்களுக்கு யாரும் சுதந்திரம் கொடுக்க வேண்டாம். அதை அவர்களே எடுத்துகொள்வாரகள் என்றார். 
 
 எல்லா ஞாயிற்றுகிழமையும் ஃபிரூட்டி காலர் ஒருவர் போட்டியாளர்களுள் யாராவது ஒருவரிடம் கேள்வி கேட்பார். இந்த முறை லாஸ்லியாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. ’லாஸ்லியா மீது சேரன் வைத்திருக்கும் பாசத்தை கவின் நாடகம் என்று சொல்லும்போது ஏன் லாஸ்லியா அதை மறுக்கவில்லை’  என்று காலர் கேட்டார். 
 
 இதற்கு லாஸ்லியா ‘ நான் இதைப்பற்றித்தான் இப்போதும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். என்மீது காட்டப்படும் பாசம் உண்மையா ? அல்லது கேமிராவிற்கு முன்னால் காட்டப்படும் பொய்யான பாசமா ? என்று தெரியவில்லை. பாசம் இருப்பதாக சொல்வார்கள் ஆனால் சிக்கன் சாப்பாடு வரும்போதெல்லாம் என்னை விட்டுவிட்டு சாப்பிடுவார்கள். எனக்காகத்தான் இந்த போட்டியில் இருப்பதாக சொல்வார்கள் ஆனால் விளையாடும்போது என்னையே டார்கெட் செய்வார்கள்.  இங்கே 24 மணிநேரம் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு எதைக் காட்டுகிறார்கள் என்று எனக்கு தெரியாது’’ என்று கூறிவிட்டு அழத்தொடங்கினார்.
 
இதைத்தொடர்ந்து கமல் லாஸ்லியாவிடம் ‘ என்ன ஆச்சு’ என்று கேட்டதும் அழுகையை நிறுத்தினார் அவர். இதைத்தொடர்ந்து அரங்கில் இருந்த பார்வையாளர்கள் போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். தர்ஷனிடம் ஒருவர் ‘ உங்கள் நண்பர்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதாக தெரிகிறது. அதை எப்போது கேட்பீர்கள்? ’ என்று கேட்டார். இதற்கு தர்ஷன் ‘ இது நல்ல கேள்வி. அதில் சிறிய குழப்பம் இருக்கிறது ‘ என்றார்.
 
உடனே கமல் ’நீங்கள் எந்த கேள்வியைப் பற்றி கேட்டீர்கள். எனக்கு ஒண்ணும் புரியவில்லை’ என்றார் நக்கலாக. பார்வையாளர் ‘ அது’ என்று இழுத்தார். உடனே கமல் ‘’ அவர் ரொம்ப கூச்சப்படுகிறார் . நீங்களாவது கூச்சப்படாமல் கேள்வி கேளுங்கள்’ என்று  தர்ஷனிடம் சொன்னார் .
 
இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் சேரன் என்ன செய்யப்போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று பார்வையாளர் கேட்டார்.
 
இதற்கு சேரன் ‘ விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறேன்’ என்றார். இதைத்தொடர்ந்து லாஸ்லியாவிடம் ’ காதலைத் தவிர வேறு எந்த கேள்வி உங்களிடம் கேட்பது என்று நீங்களே சொல்லுங்கள்’ என்று போட்டியாளர் கேட்டார்.  இதற்கு லாஸ்லியா ‘ இந்த 8 பேரின் முகத்தைத்தான் தினமும் பார்க்கிறோம். கமல்சாரின் முகத்தை பார்க்க ஒரு வாரம் காத்திருக்கிறோம்.  இந்த வீட்டில் இருக்கும் சிலர்  நீங்களெல்லாம் பார்க்காத நல்ல முகத்துடன் இருக்கிறார்கள். என் மீது எல்லை கடந்து அன்பும் வைத்திருப்பதால் உங்களுக்கு அப்படி தெரியலாம். ஆனால் இனி அந்த பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்,’ என்று கூறினார்.
 
இதைத்தொடர்ந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் 10 சொற்கள் கொடுக்கப்பட்டு அதை வைத்து கதை சொல்ல வேண்டும் என்றும் அந்த கதை பிக்பாஸ் வீட்டை பற்றியதாக இருக்க வேண்டும் என்று கமல் கூறினார். மேலும் அதற்கு நேரமும் கொடுத்தார். ஆனால் அந்த நேரத்தில் சேரன் கதையை தயார் செய்யாமல் லாஸ்லியா கூறியதை நினைத்து வனிதாவிடம் வருத்தப்பட்டார். இதற்கு வனிதா ‘ உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் பாசம் வையுங்கள். உண்மையான சொந்தம்தான் நிலைத்து நிற்கும்‘ என்றார்.
 
பிறகு எல்லா போட்டியாளர்களும் கதை சொன்னார்கள் ஆனால் சேரன் மட்டும் கதை சொல்லவில்லை.  கதை சொல்லும் மனநிலையில் நானில்லை என்று கூறிய சேரன் உண்மை, பொய் என்ற  இரண்டு சொற்கள் இருந்தால்தான் என்னால் கதை சொல்ல முடியும் என்றார். இதற்கு கமல் ‘ சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் என்று சும்மாவா சொன்னார்கள்? தன்னை கதை சொல்லியாக பதிவு செய்ய விரும்பும் நபர். இன்று தன்னால் கதை சொல்ல முடியவில்லை என்கிறார். இதன் மூலம் அவர் தனது உணர்வுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தெரிகிறது. இப்போது கதை சொல்ல வேண்டாம். விஜய் சேதுபதியுடன் சேர்ந்து செய்யும் படம் கதை சொல்லும்,’ என்றார்.
 
இதைத்தொடர்ந்து வெளியேற்றப்படும் போட்டியாளர்களில் முகென் ஷெரின் காப்பாற்றப்பட்டனர் என்றார். கவினா? வனிதாவா? என்ற நிலையில் கையில் வைத்திருக்கும் கார்டை கமல் பார்வையாள்களிடம் எறிந்தார். பார்வையாளர்கள் உங்களிடம் சொல்வார்கள் என்றார். அதற்கு முன்பாக ஒரு குறும்படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றார். அந்த குறும்படத்தில் இந்த வாரம் எந்த போட்டியாளர்களும் வெளியேற்றப்படமாட்டார்கள் என்று கமல் கூறும் காட்சிகள் இருந்தன.
 
இந்த முடிவை கேட்டு  போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்ததாக தெரியவில்லை. இதையும் கமல் கிண்டல் செய்தார். 
 

English Summary
BIg boss loslya accusing cheran

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...