???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: கவினின் ராஜ தந்திரம்!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   21 , 2019  02:47:17 IST

பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோட் ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்’ என்ற பாடலுடன் தொடங்கியது.
 
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தர்ஷனும் சேரனும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் உரையாடலின் மூலம், தர்ஷன் மீதும் லாஸ்லியா மீதும் சேரன் அதிக அன்பு வைத்துள்ளார் என்பது வெளிப்பட்டது. 'கவின் பெயரை மீண்டும் நான் நாமினேட் செய்தால் என்னை லாஸ்லியா தவறாக புரிந்துகொள்வார் என்பதால்தான் கவின் பெயரை நான் சொல்லவில்லை. உன்னை எல்லாரும் வெற்றியாளர் என்று அறிவித்தாலும் உன் பலம் என்ன என்று அறியத்தான் உன்னை நாமினேட் செய்தேன். இப்போது லாஸ்லியா சுயமாக யோசித்து செயல்படும் நிலையில் இல்லை. எனது பெயரை நாமினேட் செய்வாள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் விளையாட்டில் இதுபோல் நடப்பது சகஜம்தான். மற்றவர்களை நம்புகிறேன் என்று உனது வெற்றியை விட்டுக்கொடுக்காதே. நண்பர்களாக இருந்தாலும் போட்டி என்று வந்துவிட்டால் அவர்களுக்கு பிடித்தமானவர்களை மட்டும்தான் காப்பாற்ற நினைப்பார்கள்' என்று கூறினார்.
 
இதைத்தொடர்ந்து ஷெரினிடம் தனியாக கவின் பேசிக்கொண்டிருந்தார். சேரன் செய்வது தவறு என்றும் அவரைப் பற்றிய தவறான கருத்துக்களை ஷெரின் மனதில் பதியவைக்க வேண்டும் என்றே பேசினார். ‘லாஸ்லியா, தர்ஷன், சேரன் ஆகியோருக்கு இடையில் பிரச்சனை வந்தால் அதை அவர்கள் சரியாக கையாண்டு பிறகு ஒன்றாகி விடுகிறார்கள். ஆனால் என் விஷயத்தில் சேரன் சார் அப்படியில்லை. என்னை பிடிக்காததுபோல் நடந்துகொண்டு, அதை மறைப்பதற்காக நண்பர்போல் பேசுகிறார்’ என்று கூறினார்.
 
இதற்கு பதிலளித்த ஷெரின், 'இந்த விஷயத்தை சேரன் சாரிடமே நீ பேசிவிடு' என்றார். ஆனால் கவினோ தனது கருத்தை வலியுறுத்திக்கொண்டிருந்தார். இதற்கு முன்பாக லாஸ்லியாவிடம் இதைத்தான் கவின் செய்ய முயற்சித்து வெற்றியும் கண்டார்.
 
இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீடு பள்ளியாக மாறியது. சேரன் தலைமையாசிரியராகவும் கஸ்தூரி ஆசிரியையாகவும் மாறினர். மற்ற போட்டியாளர்கள் பள்ளிக் குழந்தைகள் போல் நடித்தனர். ஆனால் பள்ளிக் குழந்தைகள் போல் நடிக்காமல் மனநல பாதித்த நபர்கள் போல் நடித்தனர் என்று நெட்டீசன்கள் போட்டியாளர்களை கலாய்த்து வருவது வேறு கதை.
 
’ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ பாடலை லாஸ்லியா தமிழில் பாடியது சிரிக்கும்படியாக இருந்தது. கஸ்தூரி ஆசிரியரைப்போல் நடிக்க முயன்றார். வாத்து பாடல் பாடுவது, எண்களை ஓவியமாக மாற்றுவது எப்படி என்று பாடம் நடத்தினார்.
 
இதைத்தொடர்ந்து சேரன் மாணவர்களுக்கு (போட்டியாளர்களுக்கு)  உடற்பயிற்சி வகுப்பு எடுத்தார். மொத்தத்தில் நேற்றைய எபிசோட் எந்த சுவராஸ்யமும் இல்லாமல் எரிச்சலூட்டும் வகையில் இருந்தது.

English Summary
Big boss - Kavin's plan

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...