???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: கவினுக்கு லாஸ்லியாதான் பிரச்னையா?

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   24 , 2019  02:59:44 IST

பிக்பாஸின் நேற்றைய எபிசோட் ’ஹே வரியா.. ஹே வரியா’ என்ற புதுப்பேட்டை படத்தின் பாடலுடன் தொடங்கியது.

 

நிகழ்ச்சி தொடங்கியதும் தர்ஷனுக்கும் ஷெரினுக்கும் சண்டை வந்தது. ’மெத்தை விரிப்புகளை சீக்கிரமாக மடித்து வை’  என்று ஷெரினிடம் தர்ஷன் கூறினார். அவர் கூறியவிதம் கட்டளைபோடுவதுபோல் இருக்கிறது என்று சொன்ன ஷெரின் மரியாதை  குறைவாக நடந்துகொள்ள வேண்டாம் என்று தர்ஷனை எச்சரித்தார்.

 

இதைத்தொடர்ந்து தனியாக சென்று ஷெரின் அழுதார். இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க முகென், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்தனர். குழந்தைபோல் சாண்டியும் முகனும் ஓடி பிடித்து விளையாடினர். இதைத்தொடர்ந்து ஷெரினிடம் சென்று பேசுமாறு தர்ஷனிடம் லாஸ்லியா கூறினார். ’சமாதானப்படுத்துவதற்கு அவர் ஒன்றும் குழந்தை அல்ல ‘ என்று தர்ஷன் சொன்னார்.

 

இதைத்தொடர்ந்து வனிதாவிடம் ஷெரின் புலம்பினார். ‘ தர்ஷன் சிறிதாக குரல் உயர்த்தி பேசினாலும் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. யாருக்காகவும் எனது சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்றார்.

 

இதைத்தொடர்ந்து லாஸ்லியா, சேரன், சாண்டி ஆகியோருக்கு இடையில்  தலைவர் போட்டிக்கான டாஸ்க் நடைபெற்றது. இந்த போட்டியில் சேரன் வெற்றிபெற்றார்.

 

இதைத்தொடர்ந்து லட்டு சாப்பிட்டும் போட்டியில் தர்ஷன் வெற்றிபெற்றார். மாவிற்குள் பச்சை நிற காயின்கள் இருக்கும். இதை போட்டியாளர்கள் ஊதிவிட்டு, வாயால் காயினை எடுக்க வேண்டும். இந்த போட்டியில் முகென் வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து லாஸ்லியா வெற்றிபெற்றார்.

 

இதற்கு முன்பாக லாஸ்லியா கவினிடம் நீண்ட நேரம் தனியாக பேசினார். ‘ பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவது எனக்கு பிடிக்கும். ஆனால் நான் பெரியவள் என்பதற்காக எனது வீட்டில் கேக் வெட்டமாட்டார்கள்.  நான் 6 வது வகுப்பு  படிக்கும்போது என்னோடு படித்த ஒரு பையன்தான், எனக்காக கேக் வாங்கி வந்து வெட்டினான்’ என்று கூறினார்.

 

மேலும் ‘ உனக்கு என்ன பிரச்சனை கவின்? நான்தான் பிரச்சனையா?' என்று கேட்டு’ லாஸ்லியா சிரித்தார்.

 

இதைத்தொடர்ந்து ஷெரின் - தர்ஷன் பிரச்சனை மீண்டும் ஆரம்பித்தது. ஷெரினுக்கு வனிதா ஆதரவாகவும் தர்ஷனுக்கு சாண்டி ஆதரவாகவும் பேசினர். பெரிதாக வெடிக்கும் என்று பார்த்தால் இது சிறிய வாக்குவாதத்தில் முடிந்துவிட்டது.   

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...