???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது! 0 ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 0 உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் 0 கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை 0 கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி! 0 திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை 0 துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: வெளியேறிய வனிதா! பிக்பாஸின் சுவாரஸ்யம் குறையுமா?

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   15 , 2019  03:41:26 IST


Andhimazhai Image

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் வனிதா என்று கமல் கூறியதும், அனைவருக்கும் முதலில் அதிர்ச்சிதான் ஏற்பட்டது.

 

எப்போதும்போல் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பிக்பாஸ் பஞ்சாயத்து கூடும். இந்த வாரம் பஞ்சாயத்து கொஞ்சம் காரசாரமாக இருந்தது. தொகுப்பாளர் கமலை சாண்டி மற்றும் கவின் ஒரு பாடல்பாடி புகழந்து தள்ளினர். பாட்டின் இடையில் ‘மானே தேனே ‘’ போட்டுக்கொள் என்று சாண்டி கூறியதும், அரங்கமே அதை ரசித்தது.

 

போட்டியாளர்களுக்கு பீதியை உண்டாக்குவதில் கமல் ஒரு சிறந்த தொகுப்பாளர் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளரை சனிக்கிழமையே அறிவிக்கிறேன் என்று கமல் கூறிவிட்டு, மோகன் வைத்யா என்றார். உடனே மோகன் வைத்யா கண்ணிர் விட்டு, அனைவரையும் கட்டிப்பிடித்தார். லாஸ்லியாவின் நெற்றியில் முத்தம் கொடுத்தார்.  முத்தம் கொடுத்ததெல்லாம் போதும் என்று கூறிய கமல் நீங்கள் காப்பாற்றப்பட்டுவிட்டீர்கள் என்று கூறினார். 

 

இதைத்தொடர்ந்து தான்,மீராவை காதலிப்பதாக வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மீரா சொல்கிறார் என்று தர்ஷன் கமலிடம் சொன்னார். கமலின் முன்பே இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்தனர்.

 

இதைத்தொடர்ந்து இந்த காதல் விவகாரம் தொடர்பாக கவினிடம் கருத்து கேட்கலாமே என்று கமல் சொன்னதும் அரங்கில் இருந்த அனைவரும் கைத்தட்டினர். இதற்கு கவினோ தன் பிரச்சனையையே தன்னால் சரிசெய்ய முடியாமல் திண்டாடுவதாக தெரிவித்தார்.

 

இதைத்தொடர்ந்து வனிதாவிடம் கமல் இதுபற்றிகேட்க இந்த வீட்டிக்கு வந்தாலே சிலருக்கு எப்படி காதல் வருகிறது என்று தெரியவில்லை என்று வனிதா கூறினார். இதைத்தொடர்ந்து சரவணன் காப்பாற்றப்பட்டார் என்று கமல் கூறவே,  சரவணனோ நான் இரண்டு மனைவிகளை ஒரே வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். அதுதான் எனது கவலை என்றார். இதற்கு கமலோ அப்போ நீங்க குழந்தைக்காக கவலைபடவில்லை என்று நக்கலாக  கேட்டார்.

 

இதைத்தொடர்ந்து வனிதா வெளியேறப்போகிறார் என்று கமல் கூறியதும் வீட்டில் இருந்த போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வீட்டை விட்டு சென்ற வாரம் வெளியேறிய பாத்திமா பாபு வனிதாவை பிக்பாஸ் வெளியே அனுப்பாது என்று யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அவரைப்போலவே பிக்பாஸ் சீசனின் முந்தைய போட்டியாளர்களும் கூறினார்கள். ஆனால் இதை எல்லாம் பொய்யாக்கும்படியாக பிக்பாஸ் வனிதாவை வெளியேற்றி உள்ளது. இனி வீட்டில் சண்டை போடுவதற்கும், நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்வதற்கும் வாய்ப்புகள் குறைவே. என்ன பிக்பாஸ் இப்படி பண்ணீட்டிங்க.. இனி எப்படி பொழுது போகும்?

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...