???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ்: கதறி அழும் கவின்.. உச்சகட்ட வெறுப்பில் லாஸ்லியா

Posted : சனிக்கிழமை,   ஜுலை   20 , 2019  01:57:36 IST


Andhimazhai Image

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எபிசோடிலும் கவின் -சாக்‌ஷி - லாஸ்லியாவின் பிரச்சனைகள்தான் முழுவதுமாக காட்டப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ்வீட்டில் இவர்கள் பஞ்சாயத்துதான் ஓடிக்கொண்டிருப்பதால், நமக்கு சலிப்பு ஏற்பட்டது என்றுதான் கூறவேண்டும். சாக்லேட் சண்டையிலிருந்து தொடங்கிய இந்த விவகாரம் இந்த வாரம் முழுக்க நீடித்தால்  என்னதான் செய்வது?.. இது ஒருபக்கம் இருக்க நேற்றைய எபிசோடில் எதிர்பாராத திருப்பங்கள் பல இருந்தன.

 

 மீராவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சாக்‌ஷி கதறி அழுகிறார். அவரை மற்ற போட்டியாளர்கள் சமாதானப்படுத்துகின்றனர். இந்த நேரத்தில் லாஸ்லியாவும் அவரை சமாதானப்படுத்துகிறார்.  இதைத்தொடர்ந்து பேசும் லாஸ்லியா கவினிடம் சாக்‌ஷியை பேச சொல்கிறார். மேலும் தான் கவினிடம் மட்டுமே பேசிவிட்டு அவரின் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டுமே நம்பியது தனது தவறு என்று கூறினார் லாஸ்லியா.

 

மேலும் ஷெரின்  தர்ஷனுக்காக தயாரித்துக் கொடுத்த சப்பாத்தியில் லாஸ்லியா குத்திய விவகாரம் தொடர்பாக லாஸ்லியா ஷெரினிடம் மனிப்பு கேட்டார். இதைத்தொடர்ந்து பேசிய ஷெரின் வயதுக்கு மரியாதை கொடுத்து நடந்துகொள்ள கற்றுகொள்ள வேண்டும் என்று லாஸ்லியாவுக்கு அறிவுரை வழங்கினார்.

 

இதைத்தொடர்ந்து லாஸ்லியா வயதுக்கும் , மரியாதைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று ஷெரினிடம் கேட்டார். இதைத்தொடர்ந்து பேசிய ஷெரின் வயது என்பது அனுபவம் என்றார். இது பெரிய பிரச்சனையாக வெடிக்காமால் சிறிய வாக்குவாதமாக முடிந்தது.

 

ஆனால் இதை நினைத்து ஷெரின் தனியாக வருத்தப்பட்டு அழுதார். கவினை அழைத்து தனியாக சேரன் பேசினார். அப்போது சேரன் கவினுக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் அது கவின் மனதை காயப்படுத்தியது. இதைத்தொடர்ந்து கவின் அனைவரின் முன்னிலையில் தான் சில நாட்களாக நடந்து கொண்டதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என்றார். இதைத்தொடர்ந்து கழிப்பறைக்கு சென்ற கவின், மிகவும் வருத்தப்பட்டு அழுதார்.

 

அவர் ஏங்கி ஏங்கி அழும் சத்தம் சாண்டிக்கு கேட்கவே, உடனே கழிப்பறைக்கு வந்த சாண்டி அவரை சமாதானப்படுத்தினார்.

 

இதைத்தொடர்ந்து லாஸ்லியாவிடம் கவின் பேசினார். ஆனால் லாஸ்லியாவோ ‘ கவின் இருவரின் உணர்வுகளோடு விளையாடுகிறார் என்றும் இதுபோன்று நடந்துகொள்ள வேண்டாம்’ என்றும் காட்டமாக பேசினார். இதனால் மனமுடைந்த கவின் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வதாக சொன்னார்.

 

இதைத்தொடர்ந்து ஷெரின் அவரை சமாதானப்படுத்தினார். இதற்கிடையில் சேரனிடம் பேசிய லாஸ்லியா கவின் நடிக்கிறார் என்றும் தனக்கு அவரை பிடிக்கவில்லை என்றும் கூறினார்.

 

சரவணன், சேரன், அபிராமி, மீரா, மோகன் வைத்யா- இந்த ஐவரில் நாளை வெளியேற்றப் படபோவது யார் என்ற எதிர்பார்ப்பு இன்றே சூடுபிடித்துவிட்டது.

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...