???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டாடாவின் காதல் தோல்வி! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு! 0 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' 0 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு! 0 முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு 0 டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது! 0 டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத்! 0 சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி 0 கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் 0 கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ 0 பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மகள் பாசம் என்ற நாடகத்தை நடத்தும் சேரன்? : கவின் மறைமுக குற்றச்சாட்டு

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   19 , 2019  02:51:50 IST

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் இருவர் வெளியேறினர்.  மக்களின் வாக்குகள்படி அபிராமியும் ,  தன்னை காயப்படுத்திக்கொண்டதால் மதுமிதாவும் வெளியேறினர்.

 

சனிக்கிழமை எபிசோட்டில்  மதுமிதா வெளியேற்றப்படுகிறார் என்று பிக்பாஸ் கூறினார்.  தன்னை காயப்படுத்திக்கொண்டதால் ( கையை கீறிக்கொண்டதால்) அவரை வெளியேற்றியதாக பிக்பாஸ் கூறினார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியை தொடங்கிய கமல் மதுமிதாவை அழைத்தார்.  ‘  கருத்தை நிரூபிக்க இப்படி செய்வது சரியில்லை. இது ஒரு தவறான முன்னுதாரணம்’ என்று கூறினார்.

 

ஆனால் மதுமிதாவோ தான் செய்ததில் தவறில்லை என்று கூறினார். இதைத்தொடர்ந்து போட்டியாளர்களிடம் பேச விரும்புகிறீர்களா என்று கமல் கேட்டபோது. சேரன், கஸ்தூரியிடம்தான் பேச விரும்புகிறேன் அவர் கூறினார்.

 

இதைத்தொடர்ந்து பேசிய சேரன் மதுமிதா தவறான முடிவை எடுத்துவிட்டார் என்று சொன்னார்.  மதுமிதா சேரனுக்கும் கஸ்தூரிக்கும் வாழ்த்துகள் தெரிவித்து விடைப்பெற்றார்.

 

இதைத்தொடர்ந்து  ஆண் போட்டியாளர்கள் ஏன் அதிக உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்றும் ஏன் கர்ப்பூரம் போல் பற்றிக்கொள்கின்றனர் என்று கஸ்தூரியிடம் கமல் கேட்டார்.  வத்திக் குச்சி உள்ளே வந்ததால் இப்படி நடந்தது என்று வனிதாவை கிண்டல் செய்தார்.

 

இதைத்தொடர்ந்து லாஸ்லியாவிடம் பேசிய கமல், ‘சேரப்பா இனி யாருப்பா’ என்று கேட்டார்.  இதற்கு பார்வையாளர்கள்  கைதட்டினர். தொடர்ந்து பேசிய லாஸ்லியா, ’தன்னை மகள் என்று சேரன் சொல்கிறார். ஆனால்  டாஸ்க் சரியாக செய்யவில்லை என்று தன் பெயரை சொல்கிறார் . இது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதனால் அவரிடம் சரியாக பேசவில்லை,’ என்றார்.

 

சேரன் பேசாமல் இருந்ததால்தான்  லாஸ்லியா  சரியாக விளையாடுவது குறித்து யோசித்தார். எனவே சேரனின் பிளான் ஓகே கண்மணி என்று சேரனுக்கு ஆதரவாக கமல் பேசினார் .

மதுமிதா தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டதால் இந்த வாரம் வேறு யாரும் வெளியேற்றப்படமாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தார் கமல்.

 

இதைத்தொடர்ந்து ஞாயிற்றுகிழமையன்று அபிராமி வெளியேற்றப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. லாஸ்லியாவும் ஷெரினும் அபிராமியை அணைத்துக்கொண்டு அழுதனர்.  அபிராமி அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

 

இதைத்தொடர்ந்து அபிராமியிடம் பேசிய கமல் ‘ இனி சிரிக்கும் அபிராபியைத்தான் நாங்கள் பார்க்க வேண்டும்’ என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து லாஸ்லியாவிடம் சேரன் தனியாக பேசினார்.  ’தன்னை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். உனது பாசத்தால்தான் இவ்வளவு நாட்கள் இந்த வீட்டில் இருந்திருக்கிறேன். வாழ் நாள் முழுக்க இந்த உறவு தொடர வேண்டும்,’ என்று கூறினார்.

 

இதைத்தொடர்ந்து லாஸ்லியாவும் கவினும் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தனர். அப்போது லாஸ்லியாவிடம், ‘ தூங்கப்போகிறேன்’ என்று கூறிவிட்டு சேரன் சென்றார். இதைத்தொடர்ந்து கவினின் முக பாவனை  சரியில்லை. ஏன் என்று அவரிடம் லாஸ்லியா கேட்டார்.  

 

‘ சிலர் இங்கே உன்னை வைத்து நாடகம் நடத்துகிறார்கள்’ என்று கவின் சொன்னார்.

 

சேரனின் நிலைமை போகப்போக இன்னும் மோசமாகுமோ?

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...